Pages

3.9.11

செங்கொடி



வேலூர்
நோக்கி பயணம்
செய்யும் போது
மிதி வண்டி ,,
வேகத்தை விட
சற்று அதிகம்
சகோதரி ,,
டிவிஎஸ் 50
திரும்பி பார்த்தேன்
என் சகோதரியை
வேர்த்து வழிந்து
வந்து கொண்டிருந்தாள்
பெரிய வண்டிய ஒட்டி
சென்ற நானே ,,
பாதி தூரத்தில்
நண்பன் மகிழுந்தில்
பயணித்தேன் ,
முடிய வில்லை என்பதால் .
செங்கொடி ,,வெய்யலில்
வாடி ,,,வதங்கி ,,
சிறக்கி
முன் வந்தால்
உற்சாகமாய்
கோசம் வந்து விழுந்தது
நரம்பு புடைக்க
கண்களில்
கோபம் கொப்பளிக்க
வீர முழக்கம் ,,முழங்கினாள்
என் சகோதரி
வாயிக்குள் கோசம் இட்ட
நான் ,,
சகோதரியை பார்த்த பின்
சத்தம் மாக கோசம் போட
ஆரம்பித்தேன் ,,
உன்னை நினைத்து
நான் வருந்துவதா
பெருமை படுவதா,
இருக்கும்
சகோதரியை விட
வீர மரணம்
அடைந்த உனக்குதான்
என் மனதில் முதல் இடம்
வீர வணக்கம் ,,,,,,,,ப. கெளதம்