Pages

30.1.12

எது வீரம் ?



முற் காலத்தில்
கத்தியை எடுத்து
சண்டையிட்டதால்
என் இனம்
வீர பரம்பரை
என்று வெட்டி
வீரம் பேசும்
வீரர்களே
மற்றவன்
சாவை
தடுத்தால் தான்
நீ கதா நாயகன்
அழித்தால் அல்ல
தமிழன் / இதர மக்கள்
சாகும் போது
உன் வீரம்
எங்கே போயிற்று
வீரத்தை பற்றி
பேச
எந்த இனத்திற்கும்
அருகதை இல்லை
என்பதை உணர்வாயா?
காட்டு வாசி
பாம்பு விஷம்
என்று அறியாத
காலத்தில்
அதற்க்கு இரை யானனே
அவன் வீரன்
அவன் சாவை பார்த்து ,,
பாம்பு தீண்டினால்
நாம் செத்து போவோம்
என்று தன் இனத்திற்கு
தெரிய படுத்திநானே
அவன் வீரன்
பசிக்கும் போது
விஷ காயை சாப்பிட்டு
சாவை
தழுவிநானே அவன் வீரன்
புலி கடிக்கும்
பாம்பு கொத்தும்
தேள் கொட்டும் என்று ,,
அவன் உயிரை விட்டு
உனக்கு
தெரிய படுத்திநானே
அவனை வீரன்
என்று சொல்லாமல்
வேர என்னவென்று சொல்லுவது
மிருகத்திடம் எப்படி பழுகுவது
பறவையிடம் எப்படி பழகுவது
என்று ,,உனக்கு வழி காட்டினானே
அவன் வாரிசுகள் ,,இன்றும் காட்டில்
கஷ்ட படுகிறார்களே ,,,
மிருகத்திடம் எப்படி தற்காத்து கொள்வது
அதை விரட்ட
இசை வாத்தியம்
உருவாக்கிநானே !
அவனை,
பொறியியாளர் என்று சொல்வாய ?
நெருப்பை கண்டுபிடித்தானே
அவனை விஞ்சானி என்று சொல்வாய ?
காயம் ஏற்பட்டால் ,,அதற்க்கு
பச்சிலை வைத்து
குனபடுதுவானே
அவனை மருத்துவன்
என்று சொல்வாய ?
எதுவும் சொல்ல மாட்டாய்
ஒன்றும் மட்டும் சொல்லுவாய்
பழங் குடி மக்கள் என்று
ஒதுகிதான் வைப்பாய்

3.9.11

செங்கொடி



வேலூர்
நோக்கி பயணம்
செய்யும் போது
மிதி வண்டி ,,
வேகத்தை விட
சற்று அதிகம்
சகோதரி ,,
டிவிஎஸ் 50
திரும்பி பார்த்தேன்
என் சகோதரியை
வேர்த்து வழிந்து
வந்து கொண்டிருந்தாள்
பெரிய வண்டிய ஒட்டி
சென்ற நானே ,,
பாதி தூரத்தில்
நண்பன் மகிழுந்தில்
பயணித்தேன் ,
முடிய வில்லை என்பதால் .
செங்கொடி ,,வெய்யலில்
வாடி ,,,வதங்கி ,,
சிறக்கி
முன் வந்தால்
உற்சாகமாய்
கோசம் வந்து விழுந்தது
நரம்பு புடைக்க
கண்களில்
கோபம் கொப்பளிக்க
வீர முழக்கம் ,,முழங்கினாள்
என் சகோதரி
வாயிக்குள் கோசம் இட்ட
நான் ,,
சகோதரியை பார்த்த பின்
சத்தம் மாக கோசம் போட
ஆரம்பித்தேன் ,,
உன்னை நினைத்து
நான் வருந்துவதா
பெருமை படுவதா,
இருக்கும்
சகோதரியை விட
வீர மரணம்
அடைந்த உனக்குதான்
என் மனதில் முதல் இடம்
வீர வணக்கம் ,,,,,,,,ப. கெளதம்

21.8.11

மே 17 இயக்கம்

மே 17 இயக்கம் ,,,
தோல் கொடுத்து
நிற்கும் தோழர் கூட்டம்
இது
,,,தலைவர்
பதவி கிடையாது
தொண்டன்
பதவி கிடையாது
நிதி அமைசர்
பதவி கிடையாது
செயலளார்
பதவி கிடையாது
கோட்டர்குக்கும்
பிரியாணிக்கும்
அலையும் கூட்டம்
நாங்கள் அல்ல
பட்ட படிப்பு
படித்து ,,,
பல பணிகளில்
பணிபுரியும்
நல்ல நிலையில் இருக்கும்
நாகரிகம் வர்க்கம் நாங்கள்
நாவு பேசும் என்பதனால்
எது வேணாலும்
பேச வேண்டாம்
நாங்கள் செல்லும் பாதை
வீரமானது
விவேகமானது
இன்றைய நிலையில்
விஞ்சானம் வளர்ந்து
வானை சிருதாக்கி
வையத்தை சுருக்கி
அற்புதம் பல உண்டாகிருக்கும் காலத்தில்
அந்த வேகத்திற்கு
ஈடு கொடுத்து விவேகத்துடன்
ஓட வேண்டிஉள்ளது
அதன் தன்மை உங்களுக்கு
அதிகபடியாக தெரிகிறது
முன் காலத்தில் அமைதி இருந்தது
அதனால் மிதமாக செயல் பட்டீர்கள்
இன்றைய கால கட்டம் அதி வேக மிக்கது
இன்றைய இலஞ்சர்களின்
எழுச்சிக்கு தடை கல்லாக நிற்காதிர்கள்
படிக்கல்லாக இருந்து பாதை
அமைத்து தாருங்கள் ,,,ப . கெளதம்  

28.7.11

என்ன பதில் சொல்வேன்

என் மகன்
 வளர தொடங்கிவிட்டான்
பேச ஆரம்பித்தவுடன்
வினவுவான்
நம்
ஈழத்து
உறவுகள் இறந்ததை
நீங்க
எல்லாம் இருந்தும்
எப்படி அவர்களை
இறக்க விட்டீர்கள்
என்று கேட்டால்
வக்கு
இல்லாத வாலிபன்
நான் என்ன பதில்
சொல்வேன்
ஈழம் வேண்டும்
நமக்கு ,,,
வருங்காள பிள்ளைகளுக்கு
நெஞ்சை நிமிர்த்து
 சொல்லவேண்டும்
வீர மரணம் அடைந்து
பெற்றோம்
ஈழத்தை
என்று
இல்லை என்றால்
என் மகன்
வீர பிரபாகரனாக
வளர்க்கபடுவான் (அல்ல )
வளர்வான் ,,,ப,கெளதம்


1.7.11

எங்கிருந்தோ,
ஒருவன்
உரு வாக்கினான்
முக புத்தகத்தை
அதை நமக்குள்
...கரு வாக்கினான்
தெருவில்
நடந்து போகும் போது
கூட சந்திக்காத
நம் விழிகள்
கனி பொறியில்
கவிதையும்
வீர உறையும்
நம் கைகளையும்
ஒன்று சேர்க்கிறது
அது இன்று ,,,
ஒரு இயக்கமாக
மாறுகிறது

கடலில் எப்போதும் அலை
ஜூன் 26
மட்டும்
தமிழன் அலை
அதுதான்
பேரலை
தோழியும்
தோழனும்
அப்பாவும்
அம்மாவும்
அண்ணனும்
தம்பியும் ,,,,
உறவுகள் எத்தனையோ
அத்தனையும் அங்கு வருவார்கள்
அடி மனம் கதற
கண்கள் குளம் மாக
கண்ணீர்கள் கடலில்
கலக்கும் ,,,என்
உறவுகளுக்கு
நினைவு அஞ்சலி
செலுத்துவோம் ,,,,,,,,
வாருங்கள் என் உறவுகளே ,,,
(ப.கெளதம் , )

தீர்வு ,,,,தனி ஈழம் ,,,,

"ஐ.நா ,,,,வை ,,,
நம்ப மாட்டோம்
இந்தியாவையும்
நம்ப மாட்டோம்
ஐ.நா ,,,,வை ,,,
நம்பினால் ,,
என்ன கிடைக்கும்
வவுத்துக்கு வேண்டும் என்றால்
சோறு கிடைக்கும்
எங்கள் மானம்
காக்க படுமா ....
இல்லை ,,,,
இறந்தவர்கள் தான்
உயிருடன் வருவார்களா
கற்பை இழந்த என் சகோதிறிர்கள்
கற்ப்பு கிடைக்குமா ,,,
மார்பில் விளையாடிய
எங்கள் மகன்கள்
மீண்டும் வருவார்களா
ஏதும் வரபோவதில்லை
மானமே போன பிறகு
எங்களுக்கு ,,,
சோறு எதற்கு
எதற்காக ,,இதெல்லாம்
நாங்கள் இழந்தோம் ...
உறிமைக்காகவும் ,,,
ஈழம் விடுதலைக்காகவும்
இழந்து நிற்கிறோம் ,,,,
எதற்காக
எல்லாம் இழந்தோமோ
அது தான் எங்களுக்கு
தீர்வு ,,,,தனி ஈழம் ,,,,
தனி ஈழம் ,,
தனி ஈழம்
ப.கெளதம்

28.4.11

காத்துதான் இருக்கிறோம்

காத்துதான்
 இருக்கிறோம்
கயவன்
 கழுத்தறுக்க
 கழுகுக்கு
 இறையாக்க
கடல் எங்களுக்கு
எல்லையில்லை
காத்துதான் இருக்கிறோம்
ஒடிந்த கைகளும்
முறிந்த கால்களும்
எங்களுக்கு முடக்கம் அல்ல
காத்துதான் இருக்கிறோம்
தந்தையும் வருவான்
என் பிள்ளையும் வருவான்
காத்துதான் இருக்கிறோம்
தலைவன் வருவான்
தங்க தேரிலே ,,,
காத்துதான் இருக்கிறோம்
ஈழத்திற்கு ஈடு
வேறு ஏது
காத்துதான் இருக்கிறோம்
உரிமை
அது எங்கள்  கடமை
அதுதான் எங்கள் உடமை
காத்துதான் இருக்கிறோம்
தலைவன் இருக்கிறான்
தலைவன் வருவான்
ப. கெளதம்

16.4.11

கோழைகளுக்கு கோடி ரூபாய்

பந்தை போடுவான்
அதை பறக்க வைக்க
கையிலே உரை
தலையிலே கவசம்
ஆண்மையை காக்க
அதுக்கு ஒரு கவசம்
முட்டாள் ரசிகன்
உள்ளே வராம இருக்க
முள் வேலி
விக்கினால் ,,,,
விளம்பரம்
மாலை ஆனா மயக்கம்
கேட்டாள் போர் வீரன்
என்கிறார்கள்
ஏறினால் ஏரோப்ளேன்
இறங்கினால் ஹம்மர் கார்
என் ஈழ மக்கள் போரிலே
போராடி கொண்டிருக்கும் போது
தோட்டாக்களை தோளிலே
சும்ந்தார்களே எங்கள் போராளிகள்
நீங்கள்
பந்தை தடுக்க
தலையில் கவசம்
முழம் காலுக்கு முக்காடு
கொட்டைக்கு கோட்டை
கோடி கோடி சம்பரிதாலும்
உங்களுக்கு அரசு வேலை
ரயிலிலே ஓசி பயணம்
ஆயிரம் வீடு
உங்களுக்கு இருந்தாலும்
அரசு ஒதுக்கும் உயர்ந்த வீடு
அட பாவிகளா
அரசியல்வாதிகளே
தோற்று போவார்கள்
உங்களிடம்
மும்பையில் தீவிரவாதி
தாக்கும் போது
காவலர்களுக்கு நல்ல கவசம்
இல்லாமல் இறந்து போனாரே
ஒரு காவலன்
காவலனை காப்பற்ற முடியாத
இந்த அறசு உங்களுக்கு மட்டும்
கோடி கோடியாய் கொடுப்பது
ஏன் ,,,,,,,,,,
கபடி ஆடினால்
கை முறியும்
கால்பந்து ஆடினால் கால் முறியும்
ஒலிம்பிக் கில் ஓடி ஒளிவோம் ,,,,
இந்திய அரசே
கோழைகளுக்கு கோடி எதற்கு ,,,,,,,,,,,
ப. கெளதம்

15.3.11

ஆனந்த விகடன்



எட்டு எழுத்து
கொண்டவனே
எட்டு பதிப்பு
 படைத்தவனே                                                                                                       
நீ
அட்டையில் அசத்துவாய்
அரசியல் வாதிகளை
அலற வைப்பாய் ,,,,
உனக்கோ வயது
83 
எத்தனை
வயதானலும்
உன்
வாசகர்களை
வசியப்படுதுவாய்
சுட்டியாய்
இருக்கும் போது
நீ தான் ,,,
வாலிபனாக
இருக்கும் போது
நீ தான் .
என்னவளுக்கும்
நீ தான் .
என் தந்தைக்கும்
நீ தான் .
அண்ணனுக்கும்
நீ தான்
என்
அன்னைக்கும்
நீ தான் ,,,,,,,,,
ப . கெளதம்






13.3.11

ஈழம்

ஈழத்திற்கு
ஈடு
வேறு ஏது
ஈன்றேடுப்போம்
ஈழத்தை

ஈன இந்தியா
இருக்கும் போது
ஈழத்தை என்று எடுப்போம்

குள்ள நரிகளும்
குரங்கு கூட்டங்களும்
உள்ள இந்த இந்தியாவில்
மனித இனத்துக்கு
மதிப்பு ஏது,,,

ஆழிபேரலை
ஒன்று வருவதுற்குள்
ஈழத்தை
அமைத்திட்டாள்
எல்லாம் நன்றாகும்
இயற்கைக்கு
ஏது
ஈழம் / சிங்களம்
பாகு பாடு

இருக்கும்
காலம் வரை
இன்பமாக இருக்கட்டுமே
என் ஈழத்து
சகோதர சகோதிரிகள்

இந்தியாவே
உன்னால் முடியும்
ஈழத்தை அமைக்க

அதை  ஏன்
 மறுக்கிறாய்
வெருக்குறாய்
வேர் அறுக்கிறாய்

உள்ளத்தில் நல்ல உள்ளம்
அது எங்கள் உள்ளம்

தமிழன்
செய்த தவறுதான்
என்ன ?

எத்தனை
வருடம்
போராடுவோம் ,,,

ஈழத்தை
ஈன்று கொடு எங்களுக்கு
பின்பு பார்
சீருவானா
சீனன்
பக்கம் வருவான
பாகிஸ்தான் ,,,,,,
அன்று
கியூபாவுக்கு
ஒரு
ரஷ்யா
ஈழத்துக்கு
ஒரு
இந்தியா என்று
என்று வரும்
நீ
வம்பில்
வசமா
சிக்கி உள்ளாய்
ஒரு பக்கம்
சீனா
மறு பக்கம்
ஸ்ரீலங்கா
உனது அரசியல்
போதும்
உண்மையை உணர்ந்து
மாறி விடு
இல்லையேல்
ஈழத்தில் இறந்தது போல்
இந்தியாவிலும் ,,,,,,,,நடக்க நேரிடும்
வா
எங்களுடன்
சேர்ந்துவிடு ,,,,,,,,,,,,,
காத்திருக்கிறோம் கம்பிக்குள்
ப. கெளதம்















10.3.11

மறந்து போன சமசாரங்கள்




அருவா மனை
உரி
மண்பானை
...பிரிமனை
தாள் கூடை
வாழை பட்டையில் மீன் கட்டுதல்
கடுதாசி
தந்தி
வேப்பம் குச்சி
ஆலம் குச்சி
வரட்டி பொறுக்குதல்
வரட்டி தட்டுதல்

சுள்ளி பொறுக்குதல்
தினம் கேழ்வரகு கூழ்
மண் தரையில் சாணம் மொழுகுதல்
வாழை கொடாப்பு
ஆத்து குளியல்
பூசணி பூ
பத்தாயம்
குதிரு
உரல்
உமி அடுப்பு
புலி மார்க் சியக்காய்
பாத்திரத்துக்கு பேர் போடுதல்
அறுகைன் லைட்
மாடம் ,,,
திண்ணை
குஸ்தி
சாரு முட்டி
அம்மி கல்
ஆட்டு கல்
படி
மரக்கா
மாட விளக்கு
, கூட்டாஞ்சோறு,
அஞ்சறைப்பெட்டி,
குலும,
கஞ்சி தொட்டி,
காசிப்பானை ,
பித்தள செம்பு ,
போனி,
தூக்குவாளி
பாதாளக்கரண்டீ
,திருவை
உருவாம்சுருக்கு பை
முள் வாங்கி
சைக்கில் லைசென்சு
டும் லைட்
சிலேட்டு,
சிலேட்டுக்குச்சி
பழைய பலகை ஊஞ்சல்
பாட்டி உபயோகிக்கும் பாக்குவெட்டி
பந்திப்பாய்
பள்ளாங்குழி
விசிறிமட்டை
பரமபதம்
குழந்தைக்கு பால் கொடுக்கும் பாலாடை(சங்கு)...!
...தாயக்கட்டை.

மற்றதை நீங்கள் எழுதுங்கள் தோழர்களே
ப . கெளதம்


4.3.11

குழம்பி போகும் குளம்


ஓ ராசாத்தி
மல மலன்னு
வாங்கடி,,,,,,,,
ஒத்த தெரு
பொண்டுவ
வந்துருவாங்க ,,,,
ஒன்னு ரெண்டு
கெடைகிறதும்  கிடைக்காது
எங்க ஊரு
குளம்
கொஞ்சம் வத்தி போனா
இப்படிதான் குரல்
கேக்கும் ,,,,,,,,
படை எடுத்து
வருவார்கள்
பத்து பேருக்கு மேல்
குளத்தில் மீன் பிடிக்க
கையில் வலை ஒன்றும்
இருக்காது
மூங்கில் கூடை ஒன்றுதான்
இருக்கும் ,,,,
சேத்தோடு ஒக்காந்து
ஓரமா தேடுவார்கள்
சில விறால் மீன்கள்
ஒரசி கொண்டு தப்பித்து
விடும்
வரும் பாருங்க பேச்சி
ஓ ஆயா
எத்தோ தண்டியிடி ,,,,,,,,,
இப்படி பல பேச்சிகள்
பல பாஷைகள் ,,,,,,,
நம் காதில் விழுந்து கொண்டுதான்
இருக்கும் ,,,
லாவகமாக ,,,,,,
பிடிப்பார்கள்
குரவை
விரால்
சிலேபி
சென்னல்
தொழுமா
கெளுத்தி
கெண்டை
தேலீ
விலாங்கு ,,,,
ஆர
அயிர
இப்படி பலவகை
மீன்கள் ,,,,,,,
பிடித்து செல்வார்கள்
எங்கள் ஊரு
சகோதிரிகள் ,,,,,,
தெருவே
மீன் குழம்பு வாசம் தான் ,,போங்க
ப கெளதம்






























1.3.11

தூக்கு வாளியில் துவையில்

தூக்கு வாளியில் துவையில்

காலம்
கர்காலை
கலை எடுக்க
கிளம்பும்
கருப்பு தங்கங்கள் கூட்டம்
ஒரு  கையில்
கல வெட்டும்
மறு கையில்
தூக்கு வாளியும்
மடியில் மறக்காமல்
 வெத்தலை
பொட்டலமுமாக
செல்வார்கள்,,
பொட்ட வெயிலில்
பொழைப்பை
பார்க்க ,,,,
பொட்ட வெயிலில்
பட்ட  கருவ மரம்
ஒன்று இருக்கும்
அதுதான்
அவர்களுக்கு
டைனிங் டேபிள்
ஓங்கி அடிக்கும்
வெயிலில்
வெள்ளியதான் மின்னுவார்கள்
உச்சி வெயில்
உச்சியில் அடிக்கும் போது
கரை ஏறுவார்கள்
கருவ மரத்துக்கு ,,,,,
கொண்டு வந்த
கஞ்சி காத்திருக்கும்
கருவ மரத்தில் .
துண்டை உதறி
தோலில் போட்டுவிட்டு
ஒற்றை காலை
நீட்டியும்
ஒற்றை காலை
மடித்தும் குந்துவார்கள்
கொண்டு வந்த தூக்கில்
துவையலை நாம்
தேடினாலும்
கிடைக்காது
தூக்கு மூடியில்
தூங்கி கொண்டிருக்கும்
துவையில்,,,,,,,,,,,ப. கெளதம்






23.2.11

என் தந்தை

உன் முறுக்கிய
மீசையும்
உன் கண்களில்
பாசமும்
வீரத்துக்கும்
பெயர் போனவன் நீ
பெயர் சொல்ல வைத்த
பிள்ளைகளை பெற்றவன்
நீ
கம்பு எடுத்து சுத்தும்
போது
காற்று என் காதை
கிழிக்கும்
கம்பு எடுத்த கையால்
எழுத்து கோலும் பிடித்து
எழுதுவாய் கல்வியாலறாய்
கற்று கொடுத்ததுதான்
எத்தனை
எங்களுக்கு,

எங்களுக்கு மட்டும் அல்ல
எத்தனை நண்பர்கள்
வந்தாலும் அவர்களுக்கு
ஆலோசனை
 சொல்வாயே
முதலில்
எங்களை பார்க்கவரும்
நண்பர்கள் பின்பு
எங்களை மறந்து விடுவார்கள்
நீ
பேசும் வீர உரை
என் காதில் இன்றும் ஒலிக்கிறது
நீ
குடும்பம் நடத்தும் அழகுதான்
எத்தனை
நான்
கவிதை
எழுதும் போது எழுத்து
பிழை வரும்
நீ
கூறுவாய் பத்மநாபன்
மகனுக்கு பிழையாய்
என்று வருந்துவாய்
நீ
கற்றுகொடுத்த
பேச்சி ஆற்றலால்
சகோதர்கள் மூவரும்
வாங்கிய பாராட்டுக்களும்தான்
எத்தனை

பணம்
மட்டும் தான் இல்லை உன்னிடம்
குணம் கோடி உண்டு

உனக்கு என்று
ஒரு மதிப்பு
ஊரில் ,,,,,,,,,
நீ
காக்காவுக்கு  சோறு
வைக்காமல்
சாப்பிட்ட நாள் உண்டா

நான் சிறுவனாக
இருக்கும் போது
சிலம்பும் குஸ்தியும்
பயிற்சி செய்வாய்
பல கண்கள் எனக்கு
இருந்தாலும்
பத்தாது ,,

என் முகத்தில்
புகை பிடித்த வாசனை
வரும் ,,,,,,அமர வைத்து
கூறுவாய் ,,,
உதடும் இதயமும்
வீனாபோகும் பிறகு
நீ
கதாநாயகனாய் ஆவது
எப்படி என்பாய் ,,,,

உனக்கு
தெரிந்த
 மொழிகளில்
எனக்கு ஒன்றுதான்
 தெரியும் ,,,

உன்னிடம்
உள்ள பழக்கங்கள்
எனக்கு சில   இருபதாக
உறவினர்கள் சொல்வார்கள்

உன்னை பற்றி
எழுத ஆரம்பித்துவிட்டேன்
முடிக்க விருப்பம் இல்லை
முடிவில்லா தொடர்கதை
நீ ,,,,,,,,,,,,,,,,,
ப. கெளதம் பத்மநாபன்







20.2.11

ஈன்றெடுத்தாள்
ஈழம் வேந்தனை
ஈழ தமிழச்சி
ஈழத்தில்
வளர்த்திட்டாய்
பெரும் புலியை ,,,,
புலியை
பெற்றெடுத்த பெருமையும்
உன்னையே சேரும் 
காத்திரு ,,,,,,கல்லறையில்
எங்கள் கால்களும் கடைசியில்
அங்குதான் வந்து சேரும்
வரும் முன் தனி
ஈழத்தை பெற்றெடுப்போம்
அதுதான் நாங்கள் செய்யும்
கண்ணீரஞ்சலி ,,,,,,,,,,,,
வீர தாயிக்கு!
ப. கெளதம்


15.2.11

நண்பனே

என் ஆருயிர்
நண்பனே
16 வருடமாக பழகினாயே
உன்னை இன்றோடு விட்டேருகிறேன்
உன்னை விடாவிட்டால்
என்னை நான் இழக்க நேரிடும்
பல வருடம்
உன்னை விட்டு பிரிந்த
அனுபவமும் உண்டு
தோல்வி வரும்போதலாம்
தோல் கொடுத்தாயே
யாரும் ஆறுதல் சொன்னாலும்
அடையாத என் மனம்
நீ
வந்தால் மட்டுமே ஆறுதல்
அடையுமே
சந்தோசத்திலும்
துக்கத்திலும்
பங்கு போட்டு கொண்டாய்
என் கைக்குள்
சிக்கி தவிக்கும் போதுல்லாம்
உன் கோவத்தை
கொஞ்சம் கொஞ்சம்மாக
என் நெஞ்சுக்குள்
செருகினாயே ,,,,,,,,,,
உனக்குள் ,,பல
நஞ்சுகளை
வைதுருந்தாய்
அதை எனக்குள்
விதைதிருந்தாய்
விளையாட்டாய்
விலையாட்டை
விளையாடும்போது
அது வினையில் போய்
முடிந்தது ,,,,,,,,
மீண்டும்
நீ விளையாட்டை
ஆரம்பிக்கும் முன்
நான் விட்டேருகிறேன்,,,,,,,,,உன்னை ,,,,,,,,,,ப. கெளதம்

14.2.11

காதல்
கைபிடிகாதவ்ர்களுக்கு
கல்றையின் கல்யாண மேடை ,,,,,,,,,,,,ப.கெளதம்
வருடங்கள்
பல ஆனாலும்
விருப்பும்
வெறுப்பும்
முளைத்து கொண்டுதான்
இருக்கும் ,,,,,,,,
உயிர் உள்ளவரை ,,,,,,,,,,,,,,,,
ப.கெளதம்

11.2.11

அண்பான அப்பாக்கள்

கயவர்களை
கை பிடிக்கும் போதுதான்
.காதலுக்கு எதிரி
ஆகிறார்கள் ,,,,,,,,,,ப.கெளதம்

10.2.11

போர்வைக்குள் நான்

அதி காலை
அழகா கூவும்
குயில் ஓசை
அதுக்கு போட்டியா
சேவலின்
கொக்கரோ கோ சத்தம
வண்டுகளின்
ரீங்கார ஒலி
கானாங் கோழியின்
கர முரா
சத்தம்
எங்கோ ஓலம் மிடும்
நரியின் ஓலம்
காளை களின்
பெரும் மூச்சி சத்தம்
விட்டுவிட்டு விட்டு
கேக்கும் சைக்கள் பெல்
சத்தம்
அப்பாவின்
அதிகாலை தொண்டை கணைக்கும்
சத்தம்
வாய்விட்டு
படிக்கும் என் சகோதர
சகோதிரிகள்
சலசலப்பு சத்தம்
ஆல் இந்தியோ
ரேடியோ
செய்திகள் வாசிப்பது
சரோஜ் நாராயண சாமி
சத்தம்
பால்
கறக்கும் சொயிங் சொயிங்
சத்தம்
அடி பம்பில்
தண்ணி அடிக்கும் கீச் கீச்
சத்தம்
எல்லாத்தியும்
கேட்டு கொண்டுதான்
படுதுருப்பேன்
எங்க அப்பா
என்னை எழுப்பும் வரை ,,,,,,,,,,,,ப . கெளதம் பத்மநாபன்
காத்திருந்து
காத்திருந்து
கால்கள்
கடுக்கின்றனர்
எல்லாம் காசுக்கு  தானோ ,,,,,,,,,,,,,,,,,,,ப. கெளதம்

8.2.11

இல்லை
என்கின்ற வார்த்தைக்கு
இடம் இல்லை
என்னிடம்  ப. கெளதம்

4.2.11

cricket

மக்களை
மடையனாக்கும்
மகத்தான
விளையாட்டு ,
மட்டை பந்து ,,,
... ப. கெளதம்
மாப்ளைக்கு
10 சவரன்க
பொண்ணுக்கு
50 போடுங்க
கண்டிப்பா கார்
வேணுங்க ,,,,
மத்தது பண்டம் பொருள் எதும் வேணாமுங்க
வேணாமுங்க என்று
சொன்னவுடன் கொஞ்சம்
சந்தோசம் தான் பொன்னோடு
அப்பாவுக்கு
,,,மாப்ளை அப்பா சொல்லுவர்
நானே எவலநேரம்
பேசுறது ,,,அடி பங்குஜம்
கேகுரத கேளுடி
பண்டம் பொருள் எதும்
வேணாமுங்க
ரொக்கமா 3 லட்சம்
போதும் என்பாள் ,,,,,
இது எல்லாத்துக்கும் சம்மதம் சொன்னார்
தந்தை ,,,,,
கொஞ்சம்
சலசலப்பு
பொட்டியா இருந்த
பொண்ணு பொங்கி
எழுந்தால் ,,,புதுமை பெண்
எல்லாம் குடுத்ரோம்ங்க
காலையில எனக்கு
காபி குடுகுரதுலருந்து
என் பாவாடை துவைகறது
கால் அமுக்கி ,,,,
பண்ட பாத்திரம் கழுறது
மொத நீங்க செய்யனும்
எனக்கு சுகம் தேவைப்படும் போதுதான்
தாபத்தியம் ,,,,,,,என்றுரைத்தால்
சரியாய் இருந்தா தட்டு மாத்துவோம்
என்றால் ,,,,
மாப்பிளை
சொன்னான்
மேல ஒரு 10 சவரன் குடுங்க
எல்லாத்தியும் நானே செய்றேன் ,,,,,,,,,,,,,,,
?????????????ப.கெளதம்

2.2.11

என்றாவது
ஒரு நாள்
நமக்கு
யாருமே இல்லாமல்
அனாதையாய் இருப்போம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,ப. கெளதம்

1.2.11

மழைக்கு வாசக்கு ,,,,,

ஏலே
சின்னவனே
மல மலன்னு
நெல்ல அள்ளுடா
வானம் கருக்குது ,,,
மழை வரும் போல ,,,,
சுருக்கா நெல்ல அள்ளுடா ,,,,
களமே கலை கட்டும்
காச்சி மூச்சி சத்தம்
காத கிழிக்கும் .
இந்த
பால போன மழை ,,
நம்ம நெல்லு காயவைக்கும் போது
மாராடிக்கும் ,,,சனியம் ,,,,
தொல்ல தாங்குல,,
 ,,,,,வாசாக்கு
வகை வகையாய் போய் விழும்
மழைக்கு .
அடியே ,,,,,,,
செத்த இங்க வாங்கடி,,,
அப்படியே ,,,மல மாடு
மாதுரி நிப்பா ,,,
கொஞ்சம் ஒத்தாச
பன்னுங்க்டி ,,,,
ஓயாம ,,,ஒத்தாசைக்கு ...
கூபிடுவா,,,,,
மழைக்கு பயந்து
நெல்லு பாதுகாப்பாய் கோணியில்
கட்டிவிடுவாள் ,,,,
வந்த மழை
வடக்கோடு
போய்டும் ,,,,,,,,,
திரும்பவும்
வகை வகையாய்
வாசாக்கு பொழியும்
மழைக்கு ,,,,,
ப கெளதம்




28.1.11

பாரதி யார் ?

பாரதி யார் ?
யார் இந்த பாரதி
பாட்டிருக்கு
ஒரு
புலவன்
தமிழ் நாட்டிற்கு
ஒரு நல்ல
கவிஞ்சன் ,,,
எட்டயபுரத்தில்
பிறந்த ஒரு இளம் சிங்கம்
நீ
வாழும் காலத்தில்
நான் இல்லையே !
உன்னை
நான் எங்கு
தேடுவேன்
மறு ஜென்மம்
என்பார்களே
அதுல்லாம்
பொய்யோ !
என்
கண்ணீர் கரைபுரண்டு
ஓடுகிறதே ,,,
இன்று கயவர்கள்
நம் நாட்டில்
கபடி ஆடுகிறார்களே ?
எப்போது
வருவாய்
யாரு வழியில்
வருவாய்
இன்று
இருக்கும்
கவிஞ்சர்கள்
கயவர்களுக்கு
அல்லவா
கவிதை எழுதிகிறார்கள் !
பாரதி
உன் பெயரை
சூடியவர்கள்
எல்லாம்
உன்னையே
அறியமால்
இருகிரார்களே
ஐயோகோ
நான்
என்ன செய்வேன்
ஏது செய்வேன் ,,,
உன் குடும்பத்தை
வறுமையில் வாட்டி
வகை வகையாக
இந்த மானம் கெட்ட மக்களுக்கு
கவிதை படைத்தாயே!
உனது வாரிசு
எங்கே ,,,
எப்படி இருக்கிறார்கள்
ஒன்றுமே
தெரியவில்லையே ...
காந்தியை
எதிர்த்தாய்
அன்று
துணை போக யாரும் இல்லையே
உனக்கு
இன்று காந்தி வாரிசு
இல்லாமல் நம் இந்தியா
இல்லையே
உனது குற்றம்
ஒன்றும் மில்லை
நீ
தமிழனாக
பிறந்தாயே
அதுதான் குற்றம்.......?
ப. கெளதம்











27.1.11

கவி! கவி !(எனது பெயர் )
அப்பா
காட்டு கத்து
கத்துவார்
 கவி! கவி என்று
அதிகமாக
அவரிடம் அடி வாங்கியது
நானாக தான் இருக்கும் ,,,
மறைந்து மறைந்து
செல்வேன் ரகமதுல்லா கடைக்கு
2  ரூபாய் குடுத்தால் தூண்டி முள்ளும்
நரம்பும் குடுப்பார்
தூக்கி கொண்டும் வருவேன்
மறைந்து மறைந்து
சாணி குவியலை தேடுவேன்
தூண்டில் அடிகம்பால்
தோண்டி நாக்கு பூச்சியை எடுத்து
முள்ளில் கோர்ப்பேன்
கோரைகளுக்கு நடுவே நின்று கொண்டு
என்னை மறைத்துக்கொண்டு
மீன் பிடிப்பேன் ,,,,,,,
மீன் மாட்டும் சமயத்தில் அப்பா
கத்துவார் ,,,,,,,
அப்படியே விட்டு விட்டு
அப்பாவிடம் வந்து நிற்பேன்
கையில் சாணியும் மண்ணும்
ஒட்டிக்கொண்டு ஒருவித
நாற்றத்தை(வாசனை ) கொடுக்கும்
அடி விழும்
இந்த மீன்களை என்றாவது நாம்
சமைத்துல்லாம ,,,,,
என்று என் முதுகு
விரியும் ,,,,,அடி வாங்கி
அழுவேன் என்றால் அதுவும் நடக்காது
அந்த மீன்களை எனக்கும்
சாப்பிட பிடிக்காது
சமைத்ததானே சாப்பிடறதுக்கு ,,,,,
அன்று எனக்கு பொழுதுபோக்கில்
அதுவும் ஒன்று ,,,,,,,,
இன்று
தேடி பார்கிறேன் ,,,,,,,,,,,அன்றைய
கவி யாருகிட்டையும் தென்படவில்லை ,,,,,,,
ப. கெளதம்





25.1.11

கொழுந்து விட்டு
எரிந்தது தீ
சுடுகாட்டில் மனிதன்
  ,,,ப. கெளதம்

கண்ணீர்


வற்றி போன வாழ்கையில்
வற்றாத நீர்

ப. கெளதம்
என்
ஆசை எண்ணங்கள்
உருவானால்
உன் அழகு கன்னங்கள்
பழுதாகும் ,,,,,,,,,,,,ப.கெளதம்

என் விசேஷ உதடுகள் ,,,,,

உற்று நோக்கி
உன்னை உருகவைத்து
உன் உடலுக்குள் ஊடுருவிய
என் விசேஷ உதடுகள் ,,,,,,,,,
ப.கெளதம்

ஊர் கிழவி


வகுடு எடுத்து
பின்னும் போது
வாய் கூசாமல் கூறுவால்
 கிழவி
ஓடு காலி
 வீடு தங்க மாட்ட இவ ,,

கிழவி சொன்னது
சிறுமிக்கு எட்டாத
 எட்டு வயது
அவளுக்கு ...

பதினைந்து வயது இருக்கும் போது
கிழவி மண்டையில் குட்டுவால்
ஓடு காலி ,,,,,ஓடு காலி ,,,என்று

பட்டு பட்டு என்று குட்டிய
 கிழவி
ஒருநாள் பொட்டென்று  போனால்

கிழவி போன கையோடு
 அவள்
சமஞ்சதால்
 மாமன் வந்து
பொட்டு வைத்து சென்றான்

பாவாடை சட்டையில்
போகும் போது
பக்கத்துக்கு வீட்டு பயல் பார்த்ததால்
ரவிக்கை தாவணியில் திணிக்க பட்டேன்

பழைய நினைவுகள் வந்து வந்து சென்றது
கிழவி சொன்னது இபோதுதான் விளங்கியது
அவளுக்கு

 வேறொரு பயனுடன்
ஓடி போகும் போது ,,,,,


ப. கெளதம்

சென்னைக்கு பயணம்


மீண்டும்
கலர் கனவுகளுடன்
என் காகித கப்பல் ,,,,,,,
ப, கெளதம்

காதல்,,,,?

விழும் முன்
தயக்கம்
வீழ்ந்த பின்
மயக்கம்
எழுந்த பின்
வெட்கம் ,,,,,,,,
ப. கெளதம்

சும்மாவா வந்தது சுதந்திரம் ,,,,,,,,,,!

சும்மாவா வந்தது சுதந்திரம் ,,,,,,,,,,!
(பள்ளி மாணவனாக இருக்கும் போது முதல் பரிசு தட்டி சென்ற கவிதை 9 th படிக்கும் போது )


சும்மாவா வந்தது சுதந்திரம்
...இல்லை சோம்பி திரிந்ததால் வந்ததா
சுமாமாவும் வரவில்லை
சுதத்திரம் ,
சோம்பி திரிந்ததாலும்
வரவில்லை ,,,
கண் இருந்ததும் குருடராய்
காது இருந்தும் செவிடராய்
வாயு இருந்தும் ஊமைகளாய்
சுதந்திரம் என்பது என்னவென்று
அறியாமல் உறங்கிகிடந்தோம்
அபோது எங்கிருந்தோ பல குரல்கள்
விடுதலை விடுதலை என முழக்கமிட்டன

அந்த குரலுக்கு உரியவர்கள்தான்
நம் நாட்டு முன்னோர்கள்
நமக்கு சுதந்திரம் வாங்கி குடுத்த தேச பக்தர்கள்
சிறையில்
செக்கு இழுத்து
செங்கல் உடைத்து
ரத்தத்தை சிந்தியல்லவா
வந்தது சுதந்திரம் ,,,,
சும்மா எனும் பேச்சிக்கே
இடமில்லை சுமையை
சும்ந்ததினல்தான் வந்தது சுதந்திரம்
ப. கெளதம்

9.1.11

நண்பேன் டா


நீ
சிந்திய சிரிப்பில்
சிணுங்கிய உன் கண்ண குழிகள்
கவரும் நம் நட்பு வட்டாரங்களை,,,
நண்பர்கள் விசேஷத்திற்கு சென்றால்
அது நமக்கு தான் விஷேசம்
பந்தியில் ஒரே இலையில் நாம்
சாப்பிடும் போது அனைவரும் கண்களும்
நம் திசை நோக்கித்தான் படரும்
ஒரே சிகரட்டை மாற்றி மாற்றி அடித்து
நம் நட்பை நிலை படுதிக்கொண்டோம்
பீர் பாட்டில்களில் மாறி மாறி பதித்த நம் விஷேச உதடுகள்
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
நீயும் நானும் செய்த சேட்டைகளை ,,,,,,
இப்படி அனைத்துலும் பங்குபோட்டு கொண்டு .
மரணத்தில் மட்டும் என்னை   தன்னம்  தனியாக விட்டுவிட்டாயே
நீ
மண்ணுக்குள் மண்ணாகி போனாலும்
என் மனதில்
மங்கி போகாமல் இருக்கிறாய்
என் ஆருயிர் நண்பனே ,,,,,,,,,,,,,
ப. கெளதம்

8.1.11

kudu kudupai

நல்ல காலம் பிறக்கிறது நல்ல காலம் பிறக்கிறது
ஜெய் ஜக்கம்மா இந்த வீட்டுக்கு நல்ல காலம் பிறக்கிறது
இதை கேட்டு பல வருடம் ஆகிறது
பூம் பூம் மாடு பார்த்து பல வருடம் ஆகிறது ,,,,,
கிளி கிளி ஜோசியம் பாக்கலியோ ,,,கிளி ஜோசியம்
...,,,பழைய இயம் பித்தளைக்கு பேரிச்சபலம்
ஐஸ் ஐஸ் ,,,,,,,,,,,,,,பால் ஐஸ் ,,,பால் ஐஸ்
அம்மி குத்தலையோ அம்மி ,,,,,,
மகுடி ஊதி படம் பார்போம் பாம்பு படம் ,,,
என்ன ஆனார்கள் இவர்கள் ,,,,,,,,எங்கு போனார்கள்
வாழ்விடம் தொலைத்த தொழில் காரர்கள் எங்கே ,,,,,,
ப. கெளதம்

?

காணல் நீர்
போன்ற வாழ்கை
கை விட்ட
கல்வி
கசந்து போன
காதல்
நழுவி போன
நண்பர்கள்
உருக்குலைந்த போன
உருவம்
உடைந்து போன
உறவினர்கள்
கலங்குகின்ற
கண்கள்
கடினமான கஷ்டங்கள்
கள்ளம் கபடமற்ற
மனதால்
எட்டிவிடுவேன்
எதுவந்தாலும் என்
எல்லை கோட்டை அடையும் வரை
ப.கெளதம்

4.1.11

திரும்பிபார்கிறேன்

எனக்கு சிகரட்டை கற்று கொடுத்தவன் ,,கண்ணன்
எனக்கு சைக்கிள் கற்றுகொடுதவன் கருப்பையா
எனக்கு நீச்சல் கற்று கொடுத்தவன் ,,,ரஜினி / இளையராஜா
எனக்கு சரக்கு அடிக்க கற்று கொடுத்தவன் ,,,சம்பத்
எனக்கு ,,,,முதல் வேலை கற்று கொடுத்தவர் அசோக்
...அவரை தேடி கொண்டுஇருகிறேன் ,,,,,,,
எனக்கு தற்போது இருக்கும் சினிமா தொழிலை கற்று கொடுத்தவர் ராமநாதன்
எனக்கு ஆங்கிலத்தை நடைமுறையாக பேச கற்று கொடுத்தவர் (கெளதம் சந்த் )
எனக்கு கார் ஓட்ட கற்று கொடுத்தவர் ,,,,திருச்சி சசி மாமா
எனக்கு பைக் ஓட்ட கற்று கொடுத்தவர் ,,,, கொல்லுமாங்குடி சசி ,,,,,
நேர்மை,,,,,, நாணயம் ,,,சிலம்பம் ,,, ஒழுக்கம்,,,,, தவறை தட்டி கேட்பதை ,,, கற்று கொடுத்தவர் எனது தந்தை ,,,
விவசாயத்தை கற்று கொடுத்தவர் எனது சின்ன தாத்தா சின்னபிள்ளை ,,,
சென்னையில் இப்படிதான் வாழவேண்டும் என்று கற்று கொடுத்தவர் எனது அண்ணன்
அம்மாவிடம் கற்றது தர்மம் ,,,,
கபடி கற்று கொடுத்தது எனது அண்ணன் / மற்றும்  மேகநாதன் ,,,,,,,
சமையல் கற்று கொடுத்தது எனது அண்ணன்
கம்ப்யூட்டர் கேம் கற்று கொடுத்தது    அருளாளன் / அகிலன்
 எனக்கு carrom   போர்டு  கற்று கொடுத்தது எனது தங்கை புவனா ...
எனக்கு சதுரங்கம் கற்று கொடுத்தது எனது ரூம் நண்பர்கள் ,,,,,,,
எனக்கு ரம்மி கற்று கொடுத்தது ,,,,நவீன்
ஆடும் புலி கற்று கொடுத்தது சீரங்கன் மாமா,,,
தையல் கற்று கொடுத்தது எனது சித்தி,,,,,
நியூஸ் வாசிக்க கற்று கொடுத்தது எனது அண்ணன்
கதை,,, கட்டுரை,,,,    கவிதை ,,,மேடைபேச்சு ,,,கற்று கொடுத்தது எனது தந்தை
தூண்டி போட்டு மீன் பிடிக்க கற்று கொடுத்தது ராதா,,,,
 எனக்கு துப்பாக்கி  சுடுதல் கற்று கொடுத்தது அலி பாபா
நானகவே கற்று கொண்டது ,,,,,,,விடா முயற்சி ,,,,,தன்னம்பிக்கை ,,,,,,,,ஆர்வம் ,,
நான் மற்றவர்க்கு கற்று கொடுத்தது ,,,,,,,,,,,,,?
ப. கெளதம்

27.12.10

கிராமத்து விளையாட்டுகள்

மண்ணோடு மண்ணாகி போன எங்கள் கிராமத்து விளையாட்டுகள் நான் இங்கு நினைவுட்டுகிறேன் ,,,,,,,,,,,,உங்களக்கு நியாபகம் இருந்தாலும் இங்கு எழுதவும்

ஆபியம் ,,,,,,,,,,,

,இச்டாபியம் ,,,,,,,,,,,
லாகரசிய கொக்கு
லாகரசிய மன்ன தொடு,,,,,,,,,
சரா சரி உதை குடு ,,,,,,,,,,
ஒருவன் குனிய வேண்டும் மற்றவர்கள்
இந்த மந்திரத்தை சொல்லி தாண்டவேண்டும் ,,,,,
சரா சரி உதை குடுக்கு குடுப்போம் பாருங்கள்
உதை குனிதவனுக்கு கும்மா குத்துதான் ,,,,,,,,போங்க

பம்பரம் ,,,,,,,,,,,,

முதலில் வட்டம் போடுவோம்
இதில் எத்தனை பேரு வேணாலும்
கலந்துகொல்லாம் ,,,,,,,,,பம்பரத்தில் சாட்டையை சுத்த கூடாது ஒன்று ரெண்டு முனு சொன்னவுடன் பம்பரத்தில் சுத்தி அதை முதலில் யாரு யாரு அபிட் எடுகிரர்களோ அவர்கள்
பம்பரம் தப்பித்தது ,,,,,
கடைசில் அபிட் எடுத்தவன் பம்பரம் வட்டத்தில் சிக்கும்
அதை ,,,,,,,,,வட்டத்தில் இருந்து வெளிய வரவரைக்கும் அந்த பம்பரம் ,
சொறி நாயிகிட்ட கடி பட்ட போல போயுடும் ,,,,,,,,
மீண்டும் மீண்டும் அதிக உக்கு வாங்கும் பம்பரம் அருவாளால் வெட்டப்படும்
என் பம்பரம் ,,,,,,,,,,நரசிங்க பேட்டை என்ற ஊரில் ,,,,,,,,
ஸ்பெசல செய்து வரும் ,,,,,,,,,,,,,,,,அந்த பம்பரம் கருவ மரத்தில் செய்தது அதில் எந்த பம்பர ஆணியும் பதியாது
அதனால் என்பம்பரம் என்றாலே பசங்களுக்கு ஒரு வெறிதான் இருக்கும் ,,,,,,,,எனக்கு வெற்றிதான் இருக்கும் ,,,,,,,,,,

பளிங்கு ,,,,,,,,,,,,

ரோட்டில் ஒரு புகைஇலை தாள் இருக்காது எல்லாம் எங்கள் கால்சட்டையில் தான் இருக்கும் ,,,,,,
நாங்க எல்லாம் புகைஇலை,தாள் ,,,,,,சீவல் தாள் இதுதான் எங்களுக்கு பணம் ,,,,,,இதை வைத்துதான் நாங்க பளிங்கு விளையாடுவோம்
பெரிய பசங்க எல்லாம் பணத்துக்கு விளையாடுவாங்க ,,,நாங்க மாசி கட்டுவோம்
கோல்ப் ஆட்டத்தை பார்க்கும் போது ,,,,,,,
எங்க ஊரு அம்மாசி புள்ள கட்டையன் நியாபகம் தான் வரும் ,,,,,,,
அவன் பளிங்கு எங்கு இருந்து வேணாலும் மற்றொரு பளிங்கு க்கு பக்கத்தில் போட்டுவிடுவான்
இப்ப டைகர் கோல்ப் ல போடுற மாதுரி ,,,,,,,,,,,,,,,,,,

கிட்டி புல்லு ,,,,,,,,

இதில் இரட்டை அடி
மூன்றடி ,,,,,,,,,,
லாங் சாட் ,,,,,,,,,,

கவ குச்சி ,,,,,,,,

மூங்கில் குச்சி ,,,,,,,,,,கவயோடு வெட்டி,,,
அதை ஒவ்வரும் ஒன்னு ஒன்னு வைத்திருப்போம் ,,,
இதை வயலில் தான் விளையாடுவோம்
இந்த விளையாட்டில் ,,,,,,,,,,,கல்லு ,மாட்டு சாணி,, பேப்பேர் ,,,,இந்த விளையாட்டில் இடம் உண்டு
கவகுச்சியை ஒருவன் தன் முதுகுக்கு பின்னால் தூக்கி பிடிக்க வேண்டும் ,,,
மற்றொருவன் அதை அவன் குச்சியால் அதை தட்டி விட வேண்டும்
அவன் திரும்புவதற்கு குள் அந்த கவ குச்சி பல கைகள் மாறிவிடும்
அவன் நம்மை தொட வரும்போது ,,,,,,,,,மேலே சொன்ன ,,,கல்லு ,மாட்டு சாணி,, பேப்பேர்
இதில் எதாவது ஒன்றில் நம் கவகுச்சியை வைத்துவிட்டால் நாம் தப்பித்து விடுவோம்
சில பேர் கவகுச்சியை ஆறு கிலோ மீட்டர் வரை தள்ளிக்கொண்டு போயிருக்கிறோம்

100குச்சி ,,,,,,,,,,,,

இதை திண்ணையிலோ
முத்தத்திலோ ஆடுவோம் ,,,,,,,,,,
10 விளக்கமாறு குச்சியை ,,,
பாதி பாதிய உடைத்து கொள்வோம்
ஒரே ஒரு குச்சி மட்டும் பெரியதாக இருக்கும்
பத்து குச்சி யை தரையில் போடுவோம்
முதலில் ஒரு குச்சியை மட்டும் அலங்கமல் எடுக்க வேண்டும்
அலங்கினால் தோற்றுவிடுவோம் ,,,,,,,,,அந்த ஒரு குச்சியால்
ஒன்பது குச்சியை எடுக்கவேண்டும் எடுத்தவன் வெற்றி ,,,
(பின்வரும் விளையாட்டுக்கு விளையாடும் முறை அடுத்த வாரம் ) ப. கெளதம்
டிக்கி ,,,,,,,,,,,,,,,,,,,
திருடன் போலீஸ் ,,,,,,,
ஆடும் புலி ,,,,,
போலீஸ் 100 ,,,,,,,,,,,,,,
கொலை கொலைக்க முந்திரி ,,,,,,,,,,,,,,
ஐஸ் பால்,,,,,,,,,
பே பே ,,,,,,,,
கபடி ,,,,,,,,,
தாயம்,,,,,,,,,
சில்லி கோடு...........
நாடு ,,,,,,,,,
கண்ணாமுச்சி ,,,,,,,,,,

மண்ணோடு மண்ணாகி போன எங்கள் கிராமத்து விளையாட்டுகள் நான் இங்கு நினைவுட்டுகிறேன் ,,,,,,,,,,,,உங்களக்கு நியாபகம் இருந்தாலும் இங்கு எழுதவும்

மண்ணோடு மண்ணாகி போன எங்கள் கிராமத்து  விளையாட்டுகள் நான் இங்கு நினைவுட்டுகிறேன் ,,,,,,,,,,,,உங்களக்கு நியாபகம் இருந்தாலும் இங்கு எழுதவும்

ஆபியம் ,,,,,,,,,,,
,இச்டாபியம் ,,,,,,,,,,,
லாகரசிய கொக்கு
லாகரசிய மன்ன தொடு,,,,,,,,,
சரா சரி உதை குடு ,,,,,,,,,,
ஒருவன் குனிய வேண்டும் மற்றவர்கள்
இந்த மந்திரத்தை சொல்லி தாண்டவேண்டும் ,,,,,
சரா சரி உதை குடுக்கு குடுப்போம் பாருங்கள்
உதை குனிதவனுக்கு கும்மா  குத்துதான் ,,,,,,,,போங்க
பம்பரம் ,,,,,,,,,,,,
முதலில் வட்டம் போடுவோம்
இதில்  எத்தனை பேரு வேணாலும்
கலந்துகொல்லாம் ,,,,,,,,,பம்பரத்தில் சாட்டையை சுத்த கூடாது ஒன்று ரெண்டு முனு சொன்னவுடன் பம்பரத்தில் சுத்தி அதை முதலில் யாரு யாரு அபிட் எடுகிரர்களோ அவர்கள்
பம்பரம் தப்பித்தது ,,,,,
கடைசில் அபிட் எடுத்தவன் பம்பரம் வட்டத்தில் சிக்கும்
அதை ,,,,,,,,,வட்டத்தில் இருந்து வெளிய வரவரைக்கும் அந்த பம்பரம் ,
சொறி நாயிகிட்ட கடி பட்ட போல போயுடும் ,,,,,,,,
மீண்டும் மீண்டும் அதிக உக்கு வாங்கும் பம்பரம் அருவாளால் வெட்டப்படும்
என் பம்பரம் ,,,,,,,,,,நரசிங்க பேட்டை என்ற ஊரில் ,,,,,,,,
ஸ்பெசல செய்து வரும் ,,,,,,,,,,,,,,,,அந்த பம்பரம் கருவ மரத்தில் செய்தது அதில் எந்த பம்பர ஆணியும்  பதியாது
அதனால் என்பம்பரம் என்றாலே பசங்களுக்கு ஒரு வெறிதான் இருக்கும் ,,,,,,,,எனக்கு வெற்றிதான் இருக்கும் ,,,,,,,,,,
பளிங்கு ,,,,,,,,,,,,
ரோட்டில் ஒரு புகைஇலை தாள் இருக்காது எல்லாம் எங்கள் கால்சட்டையில் தான் இருக்கும் ,,,,,,
நாங்க எல்லாம்  புகைஇலை,தாள் ,,,,,,சீவல் தாள்  இதுதான் எங்களுக்கு பணம் ,,,,,,இதை வைத்துதான் நாங்க பளிங்கு விளையாடுவோம்
பெரிய பசங்க எல்லாம் பணத்துக்கு விளையாடுவாங்க ,,,நாங்க மாசி கட்டுவோம்
கோல்ப் ஆட்டத்தை பார்க்கும் போது ,,,,,,,
எங்க ஊரு அம்மாசி புள்ள கட்டையன் நியாபகம் தான் வரும் ,,,,,,,
அவன் பளிங்கு எங்கு இருந்து வேணாலும் மற்றொரு பளிங்கு க்கு பக்கத்தில் போட்டுவிடுவான்
இப்ப டைகர் கோல்ப் ல போடுற மாதுரி ,,,,,,,,,,,,,,,,,,
கிட்டி புல்லு ,,,,,,,,
இதில்  இரட்டை அடி
மூன்றடி ,,,,,,,,,,
லாங் சாட் ,,,,,,,,,,
கவ குச்சி ,,,,,,,,
மூங்கில் குச்சி ,,,,,,,,,,கவயோடு வெட்டி,,,
அதை ஒவ்வரும்  ஒன்னு ஒன்னு வைத்திருப்போம் ,,,
இதை வயலில் தான் விளையாடுவோம்
இந்த விளையாட்டில் ,,,,,,,,,,,கல்லு ,மாட்டு சாணி,,  பேப்பேர் ,,,,இந்த விளையாட்டில் இடம் உண்டு
கவகுச்சியை ஒருவன் தன் முதுகுக்கு பின்னால் தூக்கி பிடிக்க வேண்டும் ,,,
மற்றொருவன் அதை அவன் குச்சியால் அதை தட்டி விட வேண்டும்
அவன் திரும்புவதற்கு குள் அந்த கவ குச்சி பல கைகள் மாறிவிடும் 
அவன் நம்மை தொட வரும்போது ,,,,,,,,,மேலே சொன்ன ,,,
கல்லு ,மாட்டு சாணி,,  பேப்பேர்
 இதில் எதாவது ஒன்றில்  நம் கவகுச்சியை வைத்துவிட்டால் நாம் தப்பித்து விடுவோம்
சில பேர் கவகுச்சியை ஆறு கிலோ மீட்டர் வரை தள்ளிக்கொண்டு போயிருக்கிறோம்
100குச்சி ,,,,,,,,,,,,
இதை  திண்ணையிலோ
முத்தத்திலோ ஆடுவோம் ,,,,,,,,,,
10  விளக்கமாறு குச்சியை ,,,
பாதி  பாதிய உடைத்து கொள்வோம்
ஒரே ஒரு குச்சி மட்டும் பெரியதாக இருக்கும்
பத்து குச்சி யை தரையில் போடுவோம்
முதலில் ஒரு குச்சியை மட்டும் அலங்கமல் எடுக்க வேண்டும்
அலங்கினால் தோற்றுவிடுவோம் ,,,,,,,,,அந்த ஒரு குச்சியால்
ஒன்பது குச்சியை எடுக்கவேண்டும் எடுத்தவன் வெற்றி ,,,
(பின்வரும்    விளையாட்டுக்கு   விளையாடும்  முறை  அடுத்த   வாரம்  )                ப. கெளதம்
டிக்கி ,,,,,,,,,,,,,,,,,,,
திருடன் போலீஸ் ,,,,,,,
ஆடும் புலி ,,,,,
போலீஸ் 100  ,,,,,,,,,,,,,,
கொலை கொலைக்க முந்திரி ,,,,,,,,,,,,,,
ஐஸ் பால்,,,,,,,,,
பே பே ,,,,,,,,
கபடி ,,,,,,,,,
தாயம்,,,,,,,,,
சில்லி கோடு...........
நாடு ,,,,,,,,,
கண்ணாமுச்சி ,,,,,,,,,,


,














25.12.10

கண்களால் உன்னை காயபடுத்தி
கைகள் உன்னை தீண்டும்போது
நாம் காதலை விட்டு காமத்திற்கும்
மாறுவோம் அப்போது கைகள்
கட்டுபாட்டை மீறி உன்னை கட்டியணைத்து
கட்டிலுக்கு தள்ளும்போது ,,,,,,,,,,
என் காதோடு காதாக கூறுவாய்
திருமணதிற்கு பிறகு என்று ,,,
வெறும் வார்த்தைகளால் மட்டும்
இப்படி கூறிவிட்டு என்னை வாரியணைத்து
வந்தகாலம் ,,,,பாடுவதை மட்டும் நிறுத்த மாட்டாய்
தித்திக்கும் இவ் இன்பத்தை இவிரவிலே ,,,
திகட்ட திகட்ட தின்றுவிட்டு ,,,,,,,,,,
என் திசை நோக்கி செல்வேன் ,,,,,,,,
நீ திக்கு திசை தெரியாமல்
தின்றாடுகிறாய்,,,,,,,,,,,,,,,,,

21.12.10

உன் வசிகர தோற்றத்தில் வசியப்படும்
ஆண் மகன்கள்
உன் மெல்லிய வெள்ளை உடலில்
தங்கம் நிறம் பூசிய பொன் உதடுகள்
உன்னிடம் வசியபட்டவர்களில்
நானும் ஒருவன்
உன் அழகிய உடைகளில்ருந்து
உன்னை உருவிவிட்டு ,,,,,,,,
உன் பொன் நிற உதட்டில்
என் வற்றி போன உதட்டை பதிக்கும் போது
என் விடலை பருவ வயதுக்கு இது தேவைதானா என்று
நினைக்க தோணும்
பெண்ணாகவே உன்னை பாவித்ததால் புண்ணாகிய போன இதயமும்
புகையாக போன புண்பட்ட நெஞ்சும்
புகைந்துகொன்டுதான் இருக்கிறது ,,,,,,,புவிக்குள் போகும்வரை
புகையாய் ,,,,,,,,,,,,,,,,,ப. கெளதம்

13.11.10

சுனாமி

அனைவரும் ஓலம்விட்டு
அழுதோம் ஒரு நாள்
,,,,
ஒருநாள் மட்டுமா
ஓராயிரம் காலமாக
அழுதுகொண்டுதான் இருப்போம்
காரணம் நீ ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ப. கெளதம்

14.8.10

kadhal

கசங்கிய கருப்பு
கலங்கிய கண்கள்
கதறுகிறது மனசு

காதல் எனும் காவியத்தால்
கலங்க பட்டேன்
இன்று காற்றாடியில
தொங்கி கொண்டுருக்கிறேன்

காதலை விட்டு  காலத்தை விட்டு
கல்லறையை நோக்கி ,,,,,
காளையர்கள் செய்த
காமளிலையால் இன்று கல்லறைஇக்கு
கல்லறைக்கு செல்கிறேன்

அதலால் காதல் செய்யாதிர்கள் ,,,,,,,,,
ப கெளதம்

உன்னை நினைத்தாலே
இரண்டு பட்டது மனம்
ஒன்று நெருப்பு
மற்றொன்று நீர்

ப .கெளதம்

வெண் துளி

நீ
சிரித்த போது
சிந்திய வெண் துளிகளில்
சிதறியது என் மனம்

விசித்திர கண்

உறங்காமல் இருக்கும்போது
உலகத்தை பார்,,,,
உறங்கும் போது உன்னை பார்
உலகம் தெரியும்
உண்மை புரியும்
ப .கெளதம்         

கசங்கிய காகிதம்

கசங்கிய
பல காகிதத்தில்
கவி பாடும்
என் கவிதைகள்,,,,,,,,,,,,, 

 ப. கெளதம் 

17.7.10

காதல்

கல்றையின் ,,,,,
கல்யாண மேடை

ப.கெளதம்

பலவீனம்

இம்சையாகிறது இதயம்

இன்னல்களை சந்திக்கும் போது,,,,
அதனால் அது இமையமாக தெரிகிறது



ப. கெளதம்

நிழல்

கற்பனைகள் பல
கனவில் காண்பதற்கு மட்டும்

காகம்

ஒவ்வொரு முறையும் நினைப்பது உண்டு
ஒற்றுமையாக வாழவேண்டும் என்று

30.6.10

மாறுபட்ட மனிதர்களில் 
மகத்தான  மனிதன்  நான் ,,,,,,எப்போதும் மாறாத
மண்வாசனை நான் ,,,,,,,,,,,,

அன்பு நண்பர்களே நான் படிக்கும் போது எழுதுய கவிதை ,,,,,,,,,,,,,,,இது எல்லாம்

காத்திருங்கள்

வேங்கை புலி

பதறாதே மனமே பதறாதே ,,,,,,,,,,,
எது வந்தாலும் எதிர்கொள்
எழுச்சியோடு  வேங்கை புலியான உனக்கு,,,,,,,,,,,
வெற்றி நிச்சயம் ,,,,,,,,,

அன்புடன் .........
ப.கெளதம்