Pages

30.1.12

எது வீரம் ?



முற் காலத்தில்
கத்தியை எடுத்து
சண்டையிட்டதால்
என் இனம்
வீர பரம்பரை
என்று வெட்டி
வீரம் பேசும்
வீரர்களே
மற்றவன்
சாவை
தடுத்தால் தான்
நீ கதா நாயகன்
அழித்தால் அல்ல
தமிழன் / இதர மக்கள்
சாகும் போது
உன் வீரம்
எங்கே போயிற்று
வீரத்தை பற்றி
பேச
எந்த இனத்திற்கும்
அருகதை இல்லை
என்பதை உணர்வாயா?
காட்டு வாசி
பாம்பு விஷம்
என்று அறியாத
காலத்தில்
அதற்க்கு இரை யானனே
அவன் வீரன்
அவன் சாவை பார்த்து ,,
பாம்பு தீண்டினால்
நாம் செத்து போவோம்
என்று தன் இனத்திற்கு
தெரிய படுத்திநானே
அவன் வீரன்
பசிக்கும் போது
விஷ காயை சாப்பிட்டு
சாவை
தழுவிநானே அவன் வீரன்
புலி கடிக்கும்
பாம்பு கொத்தும்
தேள் கொட்டும் என்று ,,
அவன் உயிரை விட்டு
உனக்கு
தெரிய படுத்திநானே
அவனை வீரன்
என்று சொல்லாமல்
வேர என்னவென்று சொல்லுவது
மிருகத்திடம் எப்படி பழுகுவது
பறவையிடம் எப்படி பழகுவது
என்று ,,உனக்கு வழி காட்டினானே
அவன் வாரிசுகள் ,,இன்றும் காட்டில்
கஷ்ட படுகிறார்களே ,,,
மிருகத்திடம் எப்படி தற்காத்து கொள்வது
அதை விரட்ட
இசை வாத்தியம்
உருவாக்கிநானே !
அவனை,
பொறியியாளர் என்று சொல்வாய ?
நெருப்பை கண்டுபிடித்தானே
அவனை விஞ்சானி என்று சொல்வாய ?
காயம் ஏற்பட்டால் ,,அதற்க்கு
பச்சிலை வைத்து
குனபடுதுவானே
அவனை மருத்துவன்
என்று சொல்வாய ?
எதுவும் சொல்ல மாட்டாய்
ஒன்றும் மட்டும் சொல்லுவாய்
பழங் குடி மக்கள் என்று
ஒதுகிதான் வைப்பாய்