வகுடு எடுத்து
பின்னும் போது
வாய் கூசாமல் கூறுவால்
கிழவி
ஓடு காலி
வீடு தங்க மாட்ட இவ ,,
கிழவி சொன்னது
சிறுமிக்கு எட்டாத
எட்டு வயது
அவளுக்கு ...
பதினைந்து வயது இருக்கும் போது
கிழவி மண்டையில் குட்டுவால்
ஓடு காலி ,,,,,ஓடு காலி ,,,என்று
பட்டு பட்டு என்று குட்டிய
கிழவி
ஒருநாள் பொட்டென்று போனால்
கிழவி போன கையோடு
அவள்
சமஞ்சதால்
மாமன் வந்து
பொட்டு வைத்து சென்றான்
பாவாடை சட்டையில்
போகும் போது
பக்கத்துக்கு வீட்டு பயல் பார்த்ததால்
ரவிக்கை தாவணியில் திணிக்க பட்டேன்
பழைய நினைவுகள் வந்து வந்து சென்றது
கிழவி சொன்னது இபோதுதான் விளங்கியது
அவளுக்கு
வேறொரு பயனுடன்
ஓடி போகும் போது ,,,,,
ப. கெளதம்

No comments:
Post a Comment