உன் வசிகர தோற்றத்தில் வசியப்படும்
ஆண் மகன்கள்
உன் மெல்லிய வெள்ளை உடலில்
தங்கம் நிறம் பூசிய பொன் உதடுகள்
உன்னிடம் வசியபட்டவர்களில்
நானும் ஒருவன்
உன் அழகிய உடைகளில்ருந்து
உன்னை உருவிவிட்டு ,,,,,,,,
உன் பொன் நிற உதட்டில்
என் வற்றி போன உதட்டை பதிக்கும் போது
என் விடலை பருவ வயதுக்கு இது தேவைதானா என்று
நினைக்க தோணும்
பெண்ணாகவே உன்னை பாவித்ததால் புண்ணாகிய போன இதயமும்
புகையாக போன புண்பட்ட நெஞ்சும்
புகைந்துகொன்டுதான் இருக்கிறது ,,,,,,,புவிக்குள் போகும்வரை
புகையாய் ,,,,,,,,,,,,,,,,,ப. கெளதம்

No comments:
Post a Comment