Pages

27.1.11

கவி! கவி !(எனது பெயர் )
அப்பா
காட்டு கத்து
கத்துவார்
 கவி! கவி என்று
அதிகமாக
அவரிடம் அடி வாங்கியது
நானாக தான் இருக்கும் ,,,
மறைந்து மறைந்து
செல்வேன் ரகமதுல்லா கடைக்கு
2  ரூபாய் குடுத்தால் தூண்டி முள்ளும்
நரம்பும் குடுப்பார்
தூக்கி கொண்டும் வருவேன்
மறைந்து மறைந்து
சாணி குவியலை தேடுவேன்
தூண்டில் அடிகம்பால்
தோண்டி நாக்கு பூச்சியை எடுத்து
முள்ளில் கோர்ப்பேன்
கோரைகளுக்கு நடுவே நின்று கொண்டு
என்னை மறைத்துக்கொண்டு
மீன் பிடிப்பேன் ,,,,,,,
மீன் மாட்டும் சமயத்தில் அப்பா
கத்துவார் ,,,,,,,
அப்படியே விட்டு விட்டு
அப்பாவிடம் வந்து நிற்பேன்
கையில் சாணியும் மண்ணும்
ஒட்டிக்கொண்டு ஒருவித
நாற்றத்தை(வாசனை ) கொடுக்கும்
அடி விழும்
இந்த மீன்களை என்றாவது நாம்
சமைத்துல்லாம ,,,,,
என்று என் முதுகு
விரியும் ,,,,,அடி வாங்கி
அழுவேன் என்றால் அதுவும் நடக்காது
அந்த மீன்களை எனக்கும்
சாப்பிட பிடிக்காது
சமைத்ததானே சாப்பிடறதுக்கு ,,,,,
அன்று எனக்கு பொழுதுபோக்கில்
அதுவும் ஒன்று ,,,,,,,,
இன்று
தேடி பார்கிறேன் ,,,,,,,,,,,அன்றைய
கவி யாருகிட்டையும் தென்படவில்லை ,,,,,,,
ப. கெளதம்





No comments:

Post a Comment