Pages

1.2.11

மழைக்கு வாசக்கு ,,,,,

ஏலே
சின்னவனே
மல மலன்னு
நெல்ல அள்ளுடா
வானம் கருக்குது ,,,
மழை வரும் போல ,,,,
சுருக்கா நெல்ல அள்ளுடா ,,,,
களமே கலை கட்டும்
காச்சி மூச்சி சத்தம்
காத கிழிக்கும் .
இந்த
பால போன மழை ,,
நம்ம நெல்லு காயவைக்கும் போது
மாராடிக்கும் ,,,சனியம் ,,,,
தொல்ல தாங்குல,,
 ,,,,,வாசாக்கு
வகை வகையாய் போய் விழும்
மழைக்கு .
அடியே ,,,,,,,
செத்த இங்க வாங்கடி,,,
அப்படியே ,,,மல மாடு
மாதுரி நிப்பா ,,,
கொஞ்சம் ஒத்தாச
பன்னுங்க்டி ,,,,
ஓயாம ,,,ஒத்தாசைக்கு ...
கூபிடுவா,,,,,
மழைக்கு பயந்து
நெல்லு பாதுகாப்பாய் கோணியில்
கட்டிவிடுவாள் ,,,,
வந்த மழை
வடக்கோடு
போய்டும் ,,,,,,,,,
திரும்பவும்
வகை வகையாய்
வாசாக்கு பொழியும்
மழைக்கு ,,,,,
ப கெளதம்




No comments:

Post a Comment