ஓ ராசாத்தி
மல மலன்னு
வாங்கடி,,,,,,,,
ஒத்த தெரு
பொண்டுவ
வந்துருவாங்க ,,,,
ஒன்னு ரெண்டு
கெடைகிறதும் கிடைக்காது
எங்க ஊரு
குளம்
கொஞ்சம் வத்தி போனா
இப்படிதான் குரல்
கேக்கும் ,,,,,,,,
படை எடுத்து
வருவார்கள்
பத்து பேருக்கு மேல்
குளத்தில் மீன் பிடிக்க
கையில் வலை ஒன்றும்
இருக்காது
மூங்கில் கூடை ஒன்றுதான்
இருக்கும் ,,,,
சேத்தோடு ஒக்காந்து
ஓரமா தேடுவார்கள்
சில விறால் மீன்கள்
ஒரசி கொண்டு தப்பித்து
விடும்
வரும் பாருங்க பேச்சி
ஓ ஆயா
எத்தோ தண்டியிடி ,,,,,,,,,
இப்படி பல பேச்சிகள்
பல பாஷைகள் ,,,,,,,
நம் காதில் விழுந்து கொண்டுதான்
இருக்கும் ,,,
லாவகமாக ,,,,,,
பிடிப்பார்கள்
குரவை
விரால்
சிலேபி
சென்னல்
தொழுமா
கெளுத்தி
கெண்டை
தேலீ
விலாங்கு ,,,,
ஆர
அயிர
இப்படி பலவகை
மீன்கள் ,,,,,,,
பிடித்து செல்வார்கள்
எங்கள் ஊரு
சகோதிரிகள் ,,,,,,
தெருவே
மீன் குழம்பு வாசம் தான் ,,போங்க
ப கெளதம்

No comments:
Post a Comment