Pages

1.3.11

தூக்கு வாளியில் துவையில்

தூக்கு வாளியில் துவையில்

காலம்
கர்காலை
கலை எடுக்க
கிளம்பும்
கருப்பு தங்கங்கள் கூட்டம்
ஒரு  கையில்
கல வெட்டும்
மறு கையில்
தூக்கு வாளியும்
மடியில் மறக்காமல்
 வெத்தலை
பொட்டலமுமாக
செல்வார்கள்,,
பொட்ட வெயிலில்
பொழைப்பை
பார்க்க ,,,,
பொட்ட வெயிலில்
பட்ட  கருவ மரம்
ஒன்று இருக்கும்
அதுதான்
அவர்களுக்கு
டைனிங் டேபிள்
ஓங்கி அடிக்கும்
வெயிலில்
வெள்ளியதான் மின்னுவார்கள்
உச்சி வெயில்
உச்சியில் அடிக்கும் போது
கரை ஏறுவார்கள்
கருவ மரத்துக்கு ,,,,,
கொண்டு வந்த
கஞ்சி காத்திருக்கும்
கருவ மரத்தில் .
துண்டை உதறி
தோலில் போட்டுவிட்டு
ஒற்றை காலை
நீட்டியும்
ஒற்றை காலை
மடித்தும் குந்துவார்கள்
கொண்டு வந்த தூக்கில்
துவையலை நாம்
தேடினாலும்
கிடைக்காது
தூக்கு மூடியில்
தூங்கி கொண்டிருக்கும்
துவையில்,,,,,,,,,,,ப. கெளதம்






No comments:

Post a Comment