Pages

23.2.11

என் தந்தை

உன் முறுக்கிய
மீசையும்
உன் கண்களில்
பாசமும்
வீரத்துக்கும்
பெயர் போனவன் நீ
பெயர் சொல்ல வைத்த
பிள்ளைகளை பெற்றவன்
நீ
கம்பு எடுத்து சுத்தும்
போது
காற்று என் காதை
கிழிக்கும்
கம்பு எடுத்த கையால்
எழுத்து கோலும் பிடித்து
எழுதுவாய் கல்வியாலறாய்
கற்று கொடுத்ததுதான்
எத்தனை
எங்களுக்கு,

எங்களுக்கு மட்டும் அல்ல
எத்தனை நண்பர்கள்
வந்தாலும் அவர்களுக்கு
ஆலோசனை
 சொல்வாயே
முதலில்
எங்களை பார்க்கவரும்
நண்பர்கள் பின்பு
எங்களை மறந்து விடுவார்கள்
நீ
பேசும் வீர உரை
என் காதில் இன்றும் ஒலிக்கிறது
நீ
குடும்பம் நடத்தும் அழகுதான்
எத்தனை
நான்
கவிதை
எழுதும் போது எழுத்து
பிழை வரும்
நீ
கூறுவாய் பத்மநாபன்
மகனுக்கு பிழையாய்
என்று வருந்துவாய்
நீ
கற்றுகொடுத்த
பேச்சி ஆற்றலால்
சகோதர்கள் மூவரும்
வாங்கிய பாராட்டுக்களும்தான்
எத்தனை

பணம்
மட்டும் தான் இல்லை உன்னிடம்
குணம் கோடி உண்டு

உனக்கு என்று
ஒரு மதிப்பு
ஊரில் ,,,,,,,,,
நீ
காக்காவுக்கு  சோறு
வைக்காமல்
சாப்பிட்ட நாள் உண்டா

நான் சிறுவனாக
இருக்கும் போது
சிலம்பும் குஸ்தியும்
பயிற்சி செய்வாய்
பல கண்கள் எனக்கு
இருந்தாலும்
பத்தாது ,,

என் முகத்தில்
புகை பிடித்த வாசனை
வரும் ,,,,,,அமர வைத்து
கூறுவாய் ,,,
உதடும் இதயமும்
வீனாபோகும் பிறகு
நீ
கதாநாயகனாய் ஆவது
எப்படி என்பாய் ,,,,

உனக்கு
தெரிந்த
 மொழிகளில்
எனக்கு ஒன்றுதான்
 தெரியும் ,,,

உன்னிடம்
உள்ள பழக்கங்கள்
எனக்கு சில   இருபதாக
உறவினர்கள் சொல்வார்கள்

உன்னை பற்றி
எழுத ஆரம்பித்துவிட்டேன்
முடிக்க விருப்பம் இல்லை
முடிவில்லா தொடர்கதை
நீ ,,,,,,,,,,,,,,,,,
ப. கெளதம் பத்மநாபன்







No comments:

Post a Comment