Pages

16.4.11

கோழைகளுக்கு கோடி ரூபாய்

பந்தை போடுவான்
அதை பறக்க வைக்க
கையிலே உரை
தலையிலே கவசம்
ஆண்மையை காக்க
அதுக்கு ஒரு கவசம்
முட்டாள் ரசிகன்
உள்ளே வராம இருக்க
முள் வேலி
விக்கினால் ,,,,
விளம்பரம்
மாலை ஆனா மயக்கம்
கேட்டாள் போர் வீரன்
என்கிறார்கள்
ஏறினால் ஏரோப்ளேன்
இறங்கினால் ஹம்மர் கார்
என் ஈழ மக்கள் போரிலே
போராடி கொண்டிருக்கும் போது
தோட்டாக்களை தோளிலே
சும்ந்தார்களே எங்கள் போராளிகள்
நீங்கள்
பந்தை தடுக்க
தலையில் கவசம்
முழம் காலுக்கு முக்காடு
கொட்டைக்கு கோட்டை
கோடி கோடி சம்பரிதாலும்
உங்களுக்கு அரசு வேலை
ரயிலிலே ஓசி பயணம்
ஆயிரம் வீடு
உங்களுக்கு இருந்தாலும்
அரசு ஒதுக்கும் உயர்ந்த வீடு
அட பாவிகளா
அரசியல்வாதிகளே
தோற்று போவார்கள்
உங்களிடம்
மும்பையில் தீவிரவாதி
தாக்கும் போது
காவலர்களுக்கு நல்ல கவசம்
இல்லாமல் இறந்து போனாரே
ஒரு காவலன்
காவலனை காப்பற்ற முடியாத
இந்த அறசு உங்களுக்கு மட்டும்
கோடி கோடியாய் கொடுப்பது
ஏன் ,,,,,,,,,,
கபடி ஆடினால்
கை முறியும்
கால்பந்து ஆடினால் கால் முறியும்
ஒலிம்பிக் கில் ஓடி ஒளிவோம் ,,,,
இந்திய அரசே
கோழைகளுக்கு கோடி எதற்கு ,,,,,,,,,,,
ப. கெளதம்

No comments:

Post a Comment