Pages

28.4.11

காத்துதான் இருக்கிறோம்

காத்துதான்
 இருக்கிறோம்
கயவன்
 கழுத்தறுக்க
 கழுகுக்கு
 இறையாக்க
கடல் எங்களுக்கு
எல்லையில்லை
காத்துதான் இருக்கிறோம்
ஒடிந்த கைகளும்
முறிந்த கால்களும்
எங்களுக்கு முடக்கம் அல்ல
காத்துதான் இருக்கிறோம்
தந்தையும் வருவான்
என் பிள்ளையும் வருவான்
காத்துதான் இருக்கிறோம்
தலைவன் வருவான்
தங்க தேரிலே ,,,
காத்துதான் இருக்கிறோம்
ஈழத்திற்கு ஈடு
வேறு ஏது
காத்துதான் இருக்கிறோம்
உரிமை
அது எங்கள்  கடமை
அதுதான் எங்கள் உடமை
காத்துதான் இருக்கிறோம்
தலைவன் இருக்கிறான்
தலைவன் வருவான்
ப. கெளதம்

No comments:

Post a Comment