Pages

15.3.11

ஆனந்த விகடன்



எட்டு எழுத்து
கொண்டவனே
எட்டு பதிப்பு
 படைத்தவனே                                                                                                       
நீ
அட்டையில் அசத்துவாய்
அரசியல் வாதிகளை
அலற வைப்பாய் ,,,,
உனக்கோ வயது
83 
எத்தனை
வயதானலும்
உன்
வாசகர்களை
வசியப்படுதுவாய்
சுட்டியாய்
இருக்கும் போது
நீ தான் ,,,
வாலிபனாக
இருக்கும் போது
நீ தான் .
என்னவளுக்கும்
நீ தான் .
என் தந்தைக்கும்
நீ தான் .
அண்ணனுக்கும்
நீ தான்
என்
அன்னைக்கும்
நீ தான் ,,,,,,,,,
ப . கெளதம்






13.3.11

ஈழம்

ஈழத்திற்கு
ஈடு
வேறு ஏது
ஈன்றேடுப்போம்
ஈழத்தை

ஈன இந்தியா
இருக்கும் போது
ஈழத்தை என்று எடுப்போம்

குள்ள நரிகளும்
குரங்கு கூட்டங்களும்
உள்ள இந்த இந்தியாவில்
மனித இனத்துக்கு
மதிப்பு ஏது,,,

ஆழிபேரலை
ஒன்று வருவதுற்குள்
ஈழத்தை
அமைத்திட்டாள்
எல்லாம் நன்றாகும்
இயற்கைக்கு
ஏது
ஈழம் / சிங்களம்
பாகு பாடு

இருக்கும்
காலம் வரை
இன்பமாக இருக்கட்டுமே
என் ஈழத்து
சகோதர சகோதிரிகள்

இந்தியாவே
உன்னால் முடியும்
ஈழத்தை அமைக்க

அதை  ஏன்
 மறுக்கிறாய்
வெருக்குறாய்
வேர் அறுக்கிறாய்

உள்ளத்தில் நல்ல உள்ளம்
அது எங்கள் உள்ளம்

தமிழன்
செய்த தவறுதான்
என்ன ?

எத்தனை
வருடம்
போராடுவோம் ,,,

ஈழத்தை
ஈன்று கொடு எங்களுக்கு
பின்பு பார்
சீருவானா
சீனன்
பக்கம் வருவான
பாகிஸ்தான் ,,,,,,
அன்று
கியூபாவுக்கு
ஒரு
ரஷ்யா
ஈழத்துக்கு
ஒரு
இந்தியா என்று
என்று வரும்
நீ
வம்பில்
வசமா
சிக்கி உள்ளாய்
ஒரு பக்கம்
சீனா
மறு பக்கம்
ஸ்ரீலங்கா
உனது அரசியல்
போதும்
உண்மையை உணர்ந்து
மாறி விடு
இல்லையேல்
ஈழத்தில் இறந்தது போல்
இந்தியாவிலும் ,,,,,,,,நடக்க நேரிடும்
வா
எங்களுடன்
சேர்ந்துவிடு ,,,,,,,,,,,,,
காத்திருக்கிறோம் கம்பிக்குள்
ப. கெளதம்















10.3.11

மறந்து போன சமசாரங்கள்




அருவா மனை
உரி
மண்பானை
...பிரிமனை
தாள் கூடை
வாழை பட்டையில் மீன் கட்டுதல்
கடுதாசி
தந்தி
வேப்பம் குச்சி
ஆலம் குச்சி
வரட்டி பொறுக்குதல்
வரட்டி தட்டுதல்

சுள்ளி பொறுக்குதல்
தினம் கேழ்வரகு கூழ்
மண் தரையில் சாணம் மொழுகுதல்
வாழை கொடாப்பு
ஆத்து குளியல்
பூசணி பூ
பத்தாயம்
குதிரு
உரல்
உமி அடுப்பு
புலி மார்க் சியக்காய்
பாத்திரத்துக்கு பேர் போடுதல்
அறுகைன் லைட்
மாடம் ,,,
திண்ணை
குஸ்தி
சாரு முட்டி
அம்மி கல்
ஆட்டு கல்
படி
மரக்கா
மாட விளக்கு
, கூட்டாஞ்சோறு,
அஞ்சறைப்பெட்டி,
குலும,
கஞ்சி தொட்டி,
காசிப்பானை ,
பித்தள செம்பு ,
போனி,
தூக்குவாளி
பாதாளக்கரண்டீ
,திருவை
உருவாம்சுருக்கு பை
முள் வாங்கி
சைக்கில் லைசென்சு
டும் லைட்
சிலேட்டு,
சிலேட்டுக்குச்சி
பழைய பலகை ஊஞ்சல்
பாட்டி உபயோகிக்கும் பாக்குவெட்டி
பந்திப்பாய்
பள்ளாங்குழி
விசிறிமட்டை
பரமபதம்
குழந்தைக்கு பால் கொடுக்கும் பாலாடை(சங்கு)...!
...தாயக்கட்டை.

மற்றதை நீங்கள் எழுதுங்கள் தோழர்களே
ப . கெளதம்


4.3.11

குழம்பி போகும் குளம்


ஓ ராசாத்தி
மல மலன்னு
வாங்கடி,,,,,,,,
ஒத்த தெரு
பொண்டுவ
வந்துருவாங்க ,,,,
ஒன்னு ரெண்டு
கெடைகிறதும்  கிடைக்காது
எங்க ஊரு
குளம்
கொஞ்சம் வத்தி போனா
இப்படிதான் குரல்
கேக்கும் ,,,,,,,,
படை எடுத்து
வருவார்கள்
பத்து பேருக்கு மேல்
குளத்தில் மீன் பிடிக்க
கையில் வலை ஒன்றும்
இருக்காது
மூங்கில் கூடை ஒன்றுதான்
இருக்கும் ,,,,
சேத்தோடு ஒக்காந்து
ஓரமா தேடுவார்கள்
சில விறால் மீன்கள்
ஒரசி கொண்டு தப்பித்து
விடும்
வரும் பாருங்க பேச்சி
ஓ ஆயா
எத்தோ தண்டியிடி ,,,,,,,,,
இப்படி பல பேச்சிகள்
பல பாஷைகள் ,,,,,,,
நம் காதில் விழுந்து கொண்டுதான்
இருக்கும் ,,,
லாவகமாக ,,,,,,
பிடிப்பார்கள்
குரவை
விரால்
சிலேபி
சென்னல்
தொழுமா
கெளுத்தி
கெண்டை
தேலீ
விலாங்கு ,,,,
ஆர
அயிர
இப்படி பலவகை
மீன்கள் ,,,,,,,
பிடித்து செல்வார்கள்
எங்கள் ஊரு
சகோதிரிகள் ,,,,,,
தெருவே
மீன் குழம்பு வாசம் தான் ,,போங்க
ப கெளதம்






























1.3.11

தூக்கு வாளியில் துவையில்

தூக்கு வாளியில் துவையில்

காலம்
கர்காலை
கலை எடுக்க
கிளம்பும்
கருப்பு தங்கங்கள் கூட்டம்
ஒரு  கையில்
கல வெட்டும்
மறு கையில்
தூக்கு வாளியும்
மடியில் மறக்காமல்
 வெத்தலை
பொட்டலமுமாக
செல்வார்கள்,,
பொட்ட வெயிலில்
பொழைப்பை
பார்க்க ,,,,
பொட்ட வெயிலில்
பட்ட  கருவ மரம்
ஒன்று இருக்கும்
அதுதான்
அவர்களுக்கு
டைனிங் டேபிள்
ஓங்கி அடிக்கும்
வெயிலில்
வெள்ளியதான் மின்னுவார்கள்
உச்சி வெயில்
உச்சியில் அடிக்கும் போது
கரை ஏறுவார்கள்
கருவ மரத்துக்கு ,,,,,
கொண்டு வந்த
கஞ்சி காத்திருக்கும்
கருவ மரத்தில் .
துண்டை உதறி
தோலில் போட்டுவிட்டு
ஒற்றை காலை
நீட்டியும்
ஒற்றை காலை
மடித்தும் குந்துவார்கள்
கொண்டு வந்த தூக்கில்
துவையலை நாம்
தேடினாலும்
கிடைக்காது
தூக்கு மூடியில்
தூங்கி கொண்டிருக்கும்
துவையில்,,,,,,,,,,,ப. கெளதம்