Pages

28.1.11

பாரதி யார் ?

பாரதி யார் ?
யார் இந்த பாரதி
பாட்டிருக்கு
ஒரு
புலவன்
தமிழ் நாட்டிற்கு
ஒரு நல்ல
கவிஞ்சன் ,,,
எட்டயபுரத்தில்
பிறந்த ஒரு இளம் சிங்கம்
நீ
வாழும் காலத்தில்
நான் இல்லையே !
உன்னை
நான் எங்கு
தேடுவேன்
மறு ஜென்மம்
என்பார்களே
அதுல்லாம்
பொய்யோ !
என்
கண்ணீர் கரைபுரண்டு
ஓடுகிறதே ,,,
இன்று கயவர்கள்
நம் நாட்டில்
கபடி ஆடுகிறார்களே ?
எப்போது
வருவாய்
யாரு வழியில்
வருவாய்
இன்று
இருக்கும்
கவிஞ்சர்கள்
கயவர்களுக்கு
அல்லவா
கவிதை எழுதிகிறார்கள் !
பாரதி
உன் பெயரை
சூடியவர்கள்
எல்லாம்
உன்னையே
அறியமால்
இருகிரார்களே
ஐயோகோ
நான்
என்ன செய்வேன்
ஏது செய்வேன் ,,,
உன் குடும்பத்தை
வறுமையில் வாட்டி
வகை வகையாக
இந்த மானம் கெட்ட மக்களுக்கு
கவிதை படைத்தாயே!
உனது வாரிசு
எங்கே ,,,
எப்படி இருக்கிறார்கள்
ஒன்றுமே
தெரியவில்லையே ...
காந்தியை
எதிர்த்தாய்
அன்று
துணை போக யாரும் இல்லையே
உனக்கு
இன்று காந்தி வாரிசு
இல்லாமல் நம் இந்தியா
இல்லையே
உனது குற்றம்
ஒன்றும் மில்லை
நீ
தமிழனாக
பிறந்தாயே
அதுதான் குற்றம்.......?
ப. கெளதம்











27.1.11

கவி! கவி !(எனது பெயர் )
அப்பா
காட்டு கத்து
கத்துவார்
 கவி! கவி என்று
அதிகமாக
அவரிடம் அடி வாங்கியது
நானாக தான் இருக்கும் ,,,
மறைந்து மறைந்து
செல்வேன் ரகமதுல்லா கடைக்கு
2  ரூபாய் குடுத்தால் தூண்டி முள்ளும்
நரம்பும் குடுப்பார்
தூக்கி கொண்டும் வருவேன்
மறைந்து மறைந்து
சாணி குவியலை தேடுவேன்
தூண்டில் அடிகம்பால்
தோண்டி நாக்கு பூச்சியை எடுத்து
முள்ளில் கோர்ப்பேன்
கோரைகளுக்கு நடுவே நின்று கொண்டு
என்னை மறைத்துக்கொண்டு
மீன் பிடிப்பேன் ,,,,,,,
மீன் மாட்டும் சமயத்தில் அப்பா
கத்துவார் ,,,,,,,
அப்படியே விட்டு விட்டு
அப்பாவிடம் வந்து நிற்பேன்
கையில் சாணியும் மண்ணும்
ஒட்டிக்கொண்டு ஒருவித
நாற்றத்தை(வாசனை ) கொடுக்கும்
அடி விழும்
இந்த மீன்களை என்றாவது நாம்
சமைத்துல்லாம ,,,,,
என்று என் முதுகு
விரியும் ,,,,,அடி வாங்கி
அழுவேன் என்றால் அதுவும் நடக்காது
அந்த மீன்களை எனக்கும்
சாப்பிட பிடிக்காது
சமைத்ததானே சாப்பிடறதுக்கு ,,,,,
அன்று எனக்கு பொழுதுபோக்கில்
அதுவும் ஒன்று ,,,,,,,,
இன்று
தேடி பார்கிறேன் ,,,,,,,,,,,அன்றைய
கவி யாருகிட்டையும் தென்படவில்லை ,,,,,,,
ப. கெளதம்





25.1.11

கொழுந்து விட்டு
எரிந்தது தீ
சுடுகாட்டில் மனிதன்
  ,,,ப. கெளதம்

கண்ணீர்


வற்றி போன வாழ்கையில்
வற்றாத நீர்

ப. கெளதம்
என்
ஆசை எண்ணங்கள்
உருவானால்
உன் அழகு கன்னங்கள்
பழுதாகும் ,,,,,,,,,,,,ப.கெளதம்

என் விசேஷ உதடுகள் ,,,,,

உற்று நோக்கி
உன்னை உருகவைத்து
உன் உடலுக்குள் ஊடுருவிய
என் விசேஷ உதடுகள் ,,,,,,,,,
ப.கெளதம்

ஊர் கிழவி


வகுடு எடுத்து
பின்னும் போது
வாய் கூசாமல் கூறுவால்
 கிழவி
ஓடு காலி
 வீடு தங்க மாட்ட இவ ,,

கிழவி சொன்னது
சிறுமிக்கு எட்டாத
 எட்டு வயது
அவளுக்கு ...

பதினைந்து வயது இருக்கும் போது
கிழவி மண்டையில் குட்டுவால்
ஓடு காலி ,,,,,ஓடு காலி ,,,என்று

பட்டு பட்டு என்று குட்டிய
 கிழவி
ஒருநாள் பொட்டென்று  போனால்

கிழவி போன கையோடு
 அவள்
சமஞ்சதால்
 மாமன் வந்து
பொட்டு வைத்து சென்றான்

பாவாடை சட்டையில்
போகும் போது
பக்கத்துக்கு வீட்டு பயல் பார்த்ததால்
ரவிக்கை தாவணியில் திணிக்க பட்டேன்

பழைய நினைவுகள் வந்து வந்து சென்றது
கிழவி சொன்னது இபோதுதான் விளங்கியது
அவளுக்கு

 வேறொரு பயனுடன்
ஓடி போகும் போது ,,,,,


ப. கெளதம்

சென்னைக்கு பயணம்


மீண்டும்
கலர் கனவுகளுடன்
என் காகித கப்பல் ,,,,,,,
ப, கெளதம்

காதல்,,,,?

விழும் முன்
தயக்கம்
வீழ்ந்த பின்
மயக்கம்
எழுந்த பின்
வெட்கம் ,,,,,,,,
ப. கெளதம்

சும்மாவா வந்தது சுதந்திரம் ,,,,,,,,,,!

சும்மாவா வந்தது சுதந்திரம் ,,,,,,,,,,!
(பள்ளி மாணவனாக இருக்கும் போது முதல் பரிசு தட்டி சென்ற கவிதை 9 th படிக்கும் போது )


சும்மாவா வந்தது சுதந்திரம்
...இல்லை சோம்பி திரிந்ததால் வந்ததா
சுமாமாவும் வரவில்லை
சுதத்திரம் ,
சோம்பி திரிந்ததாலும்
வரவில்லை ,,,
கண் இருந்ததும் குருடராய்
காது இருந்தும் செவிடராய்
வாயு இருந்தும் ஊமைகளாய்
சுதந்திரம் என்பது என்னவென்று
அறியாமல் உறங்கிகிடந்தோம்
அபோது எங்கிருந்தோ பல குரல்கள்
விடுதலை விடுதலை என முழக்கமிட்டன

அந்த குரலுக்கு உரியவர்கள்தான்
நம் நாட்டு முன்னோர்கள்
நமக்கு சுதந்திரம் வாங்கி குடுத்த தேச பக்தர்கள்
சிறையில்
செக்கு இழுத்து
செங்கல் உடைத்து
ரத்தத்தை சிந்தியல்லவா
வந்தது சுதந்திரம் ,,,,
சும்மா எனும் பேச்சிக்கே
இடமில்லை சுமையை
சும்ந்ததினல்தான் வந்தது சுதந்திரம்
ப. கெளதம்

9.1.11

நண்பேன் டா


நீ
சிந்திய சிரிப்பில்
சிணுங்கிய உன் கண்ண குழிகள்
கவரும் நம் நட்பு வட்டாரங்களை,,,
நண்பர்கள் விசேஷத்திற்கு சென்றால்
அது நமக்கு தான் விஷேசம்
பந்தியில் ஒரே இலையில் நாம்
சாப்பிடும் போது அனைவரும் கண்களும்
நம் திசை நோக்கித்தான் படரும்
ஒரே சிகரட்டை மாற்றி மாற்றி அடித்து
நம் நட்பை நிலை படுதிக்கொண்டோம்
பீர் பாட்டில்களில் மாறி மாறி பதித்த நம் விஷேச உதடுகள்
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
நீயும் நானும் செய்த சேட்டைகளை ,,,,,,
இப்படி அனைத்துலும் பங்குபோட்டு கொண்டு .
மரணத்தில் மட்டும் என்னை   தன்னம்  தனியாக விட்டுவிட்டாயே
நீ
மண்ணுக்குள் மண்ணாகி போனாலும்
என் மனதில்
மங்கி போகாமல் இருக்கிறாய்
என் ஆருயிர் நண்பனே ,,,,,,,,,,,,,
ப. கெளதம்

8.1.11

kudu kudupai

நல்ல காலம் பிறக்கிறது நல்ல காலம் பிறக்கிறது
ஜெய் ஜக்கம்மா இந்த வீட்டுக்கு நல்ல காலம் பிறக்கிறது
இதை கேட்டு பல வருடம் ஆகிறது
பூம் பூம் மாடு பார்த்து பல வருடம் ஆகிறது ,,,,,
கிளி கிளி ஜோசியம் பாக்கலியோ ,,,கிளி ஜோசியம்
...,,,பழைய இயம் பித்தளைக்கு பேரிச்சபலம்
ஐஸ் ஐஸ் ,,,,,,,,,,,,,,பால் ஐஸ் ,,,பால் ஐஸ்
அம்மி குத்தலையோ அம்மி ,,,,,,
மகுடி ஊதி படம் பார்போம் பாம்பு படம் ,,,
என்ன ஆனார்கள் இவர்கள் ,,,,,,,,எங்கு போனார்கள்
வாழ்விடம் தொலைத்த தொழில் காரர்கள் எங்கே ,,,,,,
ப. கெளதம்

?

காணல் நீர்
போன்ற வாழ்கை
கை விட்ட
கல்வி
கசந்து போன
காதல்
நழுவி போன
நண்பர்கள்
உருக்குலைந்த போன
உருவம்
உடைந்து போன
உறவினர்கள்
கலங்குகின்ற
கண்கள்
கடினமான கஷ்டங்கள்
கள்ளம் கபடமற்ற
மனதால்
எட்டிவிடுவேன்
எதுவந்தாலும் என்
எல்லை கோட்டை அடையும் வரை
ப.கெளதம்

4.1.11

திரும்பிபார்கிறேன்

எனக்கு சிகரட்டை கற்று கொடுத்தவன் ,,கண்ணன்
எனக்கு சைக்கிள் கற்றுகொடுதவன் கருப்பையா
எனக்கு நீச்சல் கற்று கொடுத்தவன் ,,,ரஜினி / இளையராஜா
எனக்கு சரக்கு அடிக்க கற்று கொடுத்தவன் ,,,சம்பத்
எனக்கு ,,,,முதல் வேலை கற்று கொடுத்தவர் அசோக்
...அவரை தேடி கொண்டுஇருகிறேன் ,,,,,,,
எனக்கு தற்போது இருக்கும் சினிமா தொழிலை கற்று கொடுத்தவர் ராமநாதன்
எனக்கு ஆங்கிலத்தை நடைமுறையாக பேச கற்று கொடுத்தவர் (கெளதம் சந்த் )
எனக்கு கார் ஓட்ட கற்று கொடுத்தவர் ,,,,திருச்சி சசி மாமா
எனக்கு பைக் ஓட்ட கற்று கொடுத்தவர் ,,,, கொல்லுமாங்குடி சசி ,,,,,
நேர்மை,,,,,, நாணயம் ,,,சிலம்பம் ,,, ஒழுக்கம்,,,,, தவறை தட்டி கேட்பதை ,,, கற்று கொடுத்தவர் எனது தந்தை ,,,
விவசாயத்தை கற்று கொடுத்தவர் எனது சின்ன தாத்தா சின்னபிள்ளை ,,,
சென்னையில் இப்படிதான் வாழவேண்டும் என்று கற்று கொடுத்தவர் எனது அண்ணன்
அம்மாவிடம் கற்றது தர்மம் ,,,,
கபடி கற்று கொடுத்தது எனது அண்ணன் / மற்றும்  மேகநாதன் ,,,,,,,
சமையல் கற்று கொடுத்தது எனது அண்ணன்
கம்ப்யூட்டர் கேம் கற்று கொடுத்தது    அருளாளன் / அகிலன்
 எனக்கு carrom   போர்டு  கற்று கொடுத்தது எனது தங்கை புவனா ...
எனக்கு சதுரங்கம் கற்று கொடுத்தது எனது ரூம் நண்பர்கள் ,,,,,,,
எனக்கு ரம்மி கற்று கொடுத்தது ,,,,நவீன்
ஆடும் புலி கற்று கொடுத்தது சீரங்கன் மாமா,,,
தையல் கற்று கொடுத்தது எனது சித்தி,,,,,
நியூஸ் வாசிக்க கற்று கொடுத்தது எனது அண்ணன்
கதை,,, கட்டுரை,,,,    கவிதை ,,,மேடைபேச்சு ,,,கற்று கொடுத்தது எனது தந்தை
தூண்டி போட்டு மீன் பிடிக்க கற்று கொடுத்தது ராதா,,,,
 எனக்கு துப்பாக்கி  சுடுதல் கற்று கொடுத்தது அலி பாபா
நானகவே கற்று கொண்டது ,,,,,,,விடா முயற்சி ,,,,,தன்னம்பிக்கை ,,,,,,,,ஆர்வம் ,,
நான் மற்றவர்க்கு கற்று கொடுத்தது ,,,,,,,,,,,,,?
ப. கெளதம்