Pages

23.2.11

என் தந்தை

உன் முறுக்கிய
மீசையும்
உன் கண்களில்
பாசமும்
வீரத்துக்கும்
பெயர் போனவன் நீ
பெயர் சொல்ல வைத்த
பிள்ளைகளை பெற்றவன்
நீ
கம்பு எடுத்து சுத்தும்
போது
காற்று என் காதை
கிழிக்கும்
கம்பு எடுத்த கையால்
எழுத்து கோலும் பிடித்து
எழுதுவாய் கல்வியாலறாய்
கற்று கொடுத்ததுதான்
எத்தனை
எங்களுக்கு,

எங்களுக்கு மட்டும் அல்ல
எத்தனை நண்பர்கள்
வந்தாலும் அவர்களுக்கு
ஆலோசனை
 சொல்வாயே
முதலில்
எங்களை பார்க்கவரும்
நண்பர்கள் பின்பு
எங்களை மறந்து விடுவார்கள்
நீ
பேசும் வீர உரை
என் காதில் இன்றும் ஒலிக்கிறது
நீ
குடும்பம் நடத்தும் அழகுதான்
எத்தனை
நான்
கவிதை
எழுதும் போது எழுத்து
பிழை வரும்
நீ
கூறுவாய் பத்மநாபன்
மகனுக்கு பிழையாய்
என்று வருந்துவாய்
நீ
கற்றுகொடுத்த
பேச்சி ஆற்றலால்
சகோதர்கள் மூவரும்
வாங்கிய பாராட்டுக்களும்தான்
எத்தனை

பணம்
மட்டும் தான் இல்லை உன்னிடம்
குணம் கோடி உண்டு

உனக்கு என்று
ஒரு மதிப்பு
ஊரில் ,,,,,,,,,
நீ
காக்காவுக்கு  சோறு
வைக்காமல்
சாப்பிட்ட நாள் உண்டா

நான் சிறுவனாக
இருக்கும் போது
சிலம்பும் குஸ்தியும்
பயிற்சி செய்வாய்
பல கண்கள் எனக்கு
இருந்தாலும்
பத்தாது ,,

என் முகத்தில்
புகை பிடித்த வாசனை
வரும் ,,,,,,அமர வைத்து
கூறுவாய் ,,,
உதடும் இதயமும்
வீனாபோகும் பிறகு
நீ
கதாநாயகனாய் ஆவது
எப்படி என்பாய் ,,,,

உனக்கு
தெரிந்த
 மொழிகளில்
எனக்கு ஒன்றுதான்
 தெரியும் ,,,

உன்னிடம்
உள்ள பழக்கங்கள்
எனக்கு சில   இருபதாக
உறவினர்கள் சொல்வார்கள்

உன்னை பற்றி
எழுத ஆரம்பித்துவிட்டேன்
முடிக்க விருப்பம் இல்லை
முடிவில்லா தொடர்கதை
நீ ,,,,,,,,,,,,,,,,,
ப. கெளதம் பத்மநாபன்







20.2.11

ஈன்றெடுத்தாள்
ஈழம் வேந்தனை
ஈழ தமிழச்சி
ஈழத்தில்
வளர்த்திட்டாய்
பெரும் புலியை ,,,,
புலியை
பெற்றெடுத்த பெருமையும்
உன்னையே சேரும் 
காத்திரு ,,,,,,கல்லறையில்
எங்கள் கால்களும் கடைசியில்
அங்குதான் வந்து சேரும்
வரும் முன் தனி
ஈழத்தை பெற்றெடுப்போம்
அதுதான் நாங்கள் செய்யும்
கண்ணீரஞ்சலி ,,,,,,,,,,,,
வீர தாயிக்கு!
ப. கெளதம்


15.2.11

நண்பனே

என் ஆருயிர்
நண்பனே
16 வருடமாக பழகினாயே
உன்னை இன்றோடு விட்டேருகிறேன்
உன்னை விடாவிட்டால்
என்னை நான் இழக்க நேரிடும்
பல வருடம்
உன்னை விட்டு பிரிந்த
அனுபவமும் உண்டு
தோல்வி வரும்போதலாம்
தோல் கொடுத்தாயே
யாரும் ஆறுதல் சொன்னாலும்
அடையாத என் மனம்
நீ
வந்தால் மட்டுமே ஆறுதல்
அடையுமே
சந்தோசத்திலும்
துக்கத்திலும்
பங்கு போட்டு கொண்டாய்
என் கைக்குள்
சிக்கி தவிக்கும் போதுல்லாம்
உன் கோவத்தை
கொஞ்சம் கொஞ்சம்மாக
என் நெஞ்சுக்குள்
செருகினாயே ,,,,,,,,,,
உனக்குள் ,,பல
நஞ்சுகளை
வைதுருந்தாய்
அதை எனக்குள்
விதைதிருந்தாய்
விளையாட்டாய்
விலையாட்டை
விளையாடும்போது
அது வினையில் போய்
முடிந்தது ,,,,,,,,
மீண்டும்
நீ விளையாட்டை
ஆரம்பிக்கும் முன்
நான் விட்டேருகிறேன்,,,,,,,,,உன்னை ,,,,,,,,,,ப. கெளதம்

14.2.11

காதல்
கைபிடிகாதவ்ர்களுக்கு
கல்றையின் கல்யாண மேடை ,,,,,,,,,,,,ப.கெளதம்
வருடங்கள்
பல ஆனாலும்
விருப்பும்
வெறுப்பும்
முளைத்து கொண்டுதான்
இருக்கும் ,,,,,,,,
உயிர் உள்ளவரை ,,,,,,,,,,,,,,,,
ப.கெளதம்

11.2.11

அண்பான அப்பாக்கள்

கயவர்களை
கை பிடிக்கும் போதுதான்
.காதலுக்கு எதிரி
ஆகிறார்கள் ,,,,,,,,,,ப.கெளதம்

10.2.11

போர்வைக்குள் நான்

அதி காலை
அழகா கூவும்
குயில் ஓசை
அதுக்கு போட்டியா
சேவலின்
கொக்கரோ கோ சத்தம
வண்டுகளின்
ரீங்கார ஒலி
கானாங் கோழியின்
கர முரா
சத்தம்
எங்கோ ஓலம் மிடும்
நரியின் ஓலம்
காளை களின்
பெரும் மூச்சி சத்தம்
விட்டுவிட்டு விட்டு
கேக்கும் சைக்கள் பெல்
சத்தம்
அப்பாவின்
அதிகாலை தொண்டை கணைக்கும்
சத்தம்
வாய்விட்டு
படிக்கும் என் சகோதர
சகோதிரிகள்
சலசலப்பு சத்தம்
ஆல் இந்தியோ
ரேடியோ
செய்திகள் வாசிப்பது
சரோஜ் நாராயண சாமி
சத்தம்
பால்
கறக்கும் சொயிங் சொயிங்
சத்தம்
அடி பம்பில்
தண்ணி அடிக்கும் கீச் கீச்
சத்தம்
எல்லாத்தியும்
கேட்டு கொண்டுதான்
படுதுருப்பேன்
எங்க அப்பா
என்னை எழுப்பும் வரை ,,,,,,,,,,,,ப . கெளதம் பத்மநாபன்
காத்திருந்து
காத்திருந்து
கால்கள்
கடுக்கின்றனர்
எல்லாம் காசுக்கு  தானோ ,,,,,,,,,,,,,,,,,,,ப. கெளதம்

8.2.11

இல்லை
என்கின்ற வார்த்தைக்கு
இடம் இல்லை
என்னிடம்  ப. கெளதம்

4.2.11

cricket

மக்களை
மடையனாக்கும்
மகத்தான
விளையாட்டு ,
மட்டை பந்து ,,,
... ப. கெளதம்
மாப்ளைக்கு
10 சவரன்க
பொண்ணுக்கு
50 போடுங்க
கண்டிப்பா கார்
வேணுங்க ,,,,
மத்தது பண்டம் பொருள் எதும் வேணாமுங்க
வேணாமுங்க என்று
சொன்னவுடன் கொஞ்சம்
சந்தோசம் தான் பொன்னோடு
அப்பாவுக்கு
,,,மாப்ளை அப்பா சொல்லுவர்
நானே எவலநேரம்
பேசுறது ,,,அடி பங்குஜம்
கேகுரத கேளுடி
பண்டம் பொருள் எதும்
வேணாமுங்க
ரொக்கமா 3 லட்சம்
போதும் என்பாள் ,,,,,
இது எல்லாத்துக்கும் சம்மதம் சொன்னார்
தந்தை ,,,,,
கொஞ்சம்
சலசலப்பு
பொட்டியா இருந்த
பொண்ணு பொங்கி
எழுந்தால் ,,,புதுமை பெண்
எல்லாம் குடுத்ரோம்ங்க
காலையில எனக்கு
காபி குடுகுரதுலருந்து
என் பாவாடை துவைகறது
கால் அமுக்கி ,,,,
பண்ட பாத்திரம் கழுறது
மொத நீங்க செய்யனும்
எனக்கு சுகம் தேவைப்படும் போதுதான்
தாபத்தியம் ,,,,,,,என்றுரைத்தால்
சரியாய் இருந்தா தட்டு மாத்துவோம்
என்றால் ,,,,
மாப்பிளை
சொன்னான்
மேல ஒரு 10 சவரன் குடுங்க
எல்லாத்தியும் நானே செய்றேன் ,,,,,,,,,,,,,,,
?????????????ப.கெளதம்

2.2.11

என்றாவது
ஒரு நாள்
நமக்கு
யாருமே இல்லாமல்
அனாதையாய் இருப்போம் ,,,,,,,,,,,,,,,,,,,,,,ப. கெளதம்

1.2.11

மழைக்கு வாசக்கு ,,,,,

ஏலே
சின்னவனே
மல மலன்னு
நெல்ல அள்ளுடா
வானம் கருக்குது ,,,
மழை வரும் போல ,,,,
சுருக்கா நெல்ல அள்ளுடா ,,,,
களமே கலை கட்டும்
காச்சி மூச்சி சத்தம்
காத கிழிக்கும் .
இந்த
பால போன மழை ,,
நம்ம நெல்லு காயவைக்கும் போது
மாராடிக்கும் ,,,சனியம் ,,,,
தொல்ல தாங்குல,,
 ,,,,,வாசாக்கு
வகை வகையாய் போய் விழும்
மழைக்கு .
அடியே ,,,,,,,
செத்த இங்க வாங்கடி,,,
அப்படியே ,,,மல மாடு
மாதுரி நிப்பா ,,,
கொஞ்சம் ஒத்தாச
பன்னுங்க்டி ,,,,
ஓயாம ,,,ஒத்தாசைக்கு ...
கூபிடுவா,,,,,
மழைக்கு பயந்து
நெல்லு பாதுகாப்பாய் கோணியில்
கட்டிவிடுவாள் ,,,,
வந்த மழை
வடக்கோடு
போய்டும் ,,,,,,,,,
திரும்பவும்
வகை வகையாய்
வாசாக்கு பொழியும்
மழைக்கு ,,,,,
ப கெளதம்